
அதிர்ச்சி..! தற்காலிக ஆசிரியர் தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி தெரியுமா? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி, 2022 – 2023ஆம் கல்வியாண்டில், ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. தற்காலிக ஆசிரியர்களுக்கு, இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000, முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும், தகுதியான நபர்கள் ஜூலை 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி மாலை 5 மணி வரையில், அந்தந்த பகுதி மாவட்ட கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் நிலை ஆசிரியர் பண...