
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முன்னதாக, அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்காக ஆட்சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பு மூலம் 5413 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளது. சில பதவிகள் முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. அதே சமயம், பெரும்பாலான பதவிகளுக்கு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு நிலைகளில் மட்டும் நியமனங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கிப்பட்டது. அனைத்து பதவிகளுக்காமான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. 11 .78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். முன்னதாக, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட விரிவான ஆட்சேர்ப்பு அறிவிப்பில் ஜுலையில் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், முதன்மை எழுத்துத் தேர்வு ச...