
அவிநாசி அரசுப் பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்! திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அரசுப்பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி நேற்று மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் பள்ளி வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளியில் உரிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாகவும், இதனால் மாற்றுச்சான்றிதழ் பெற்று வேறு பள்ளிகளுக்கு செல்வதாகவும் தெரிவித்தனர். எனவே பள்ளியில் விரைந்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளியில் கூடுதலாக 2 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.