Posts

Showing posts from July 5, 2022
Image
  TET ஆசிரியர் தகுதித்தேர்வு 2022: தேர்வு வாரியம் மிக முக்கிய அறிவிப்பு..!!!!! தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் தகுதி தேர்வுகள் நடத்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படவில்லை. இதன் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து. இதனையடுத்து 13,300-க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் ஆகஸ்ட் 25 முதல் 31ஆம் தேதி வரை தாள் ஒன்றுக்கு மட்டுமே தேர்வு நடத்த உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேர்வு கால அட்டவணை, அனுமதி சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது
Image
  தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்: உயர் நீதிமன்ற உத்தரவால் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் டெட் தேர்ச்சியாளர்கள் தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு, நேற்று முதல் இணையம் வழியாகவோ அல்லது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலோ அல்லது மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்திலோ விண்ணப்பிக்கலாம்' என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதையடுத்து நேற்று முதல் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் திருச்சி, லால்குடி, முசிறி உள்ளிட்ட மாவட்டக் கல்வி அலுவலங்களில் வேலைக்கு விண்ணப்பிக்க ஏராளமான ஆசிரியர்கள் குவிந்தனர். ஆனால், அங்குள்ள அலுவலர்கள் அவர்களது விண்ணப்பங்களை ஏற்கவில்லை. மாறாக, 'தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருப்பதால், திருச்சி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் சார்ந்த எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை' என்ற அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பை மட்டும் சுட்டிக்காட்டினர். இதனால் குழப்பம் அடைந்த ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்களிடம் விசாரித்த போது, 'மதுரை கிளை நீதிமன்றத்தின்
Image
  TN TRB PG: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய முடிவு மற்றும் கட் ஆஃப் வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரிய முதுநிலை உதவியாளர் முடிவு வெளியானது.வெற்றி பெற்றவர்களில் இருந்து மொத்தம் 2693 பேர் பணி நியமனம் பெறுவார்கள். முதுகலை உதவியாளர்/உடற்கல்வி இயக்குநர்கள் தரம்-I மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் தரம் I 2020-2021 தேர்வுகளை எழுதியவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகள், trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வு பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 20, 2022 வரை பல்வேறு தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மொத்தம் 2693 காலியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறயின் முக்கியமான கட்டம் இது. மதிப்பெண் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். தேர்வு எழுதியவர்கள், தங்களுடைய ரோல் எண் மற்றும் பிற குறிப்புகளைக் கொண்டு தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். TN TRB பிஜி முடிவு 2022: பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் படி 1: TRN TN இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் trb.tn.nic.inக்கு செல்லவும
Image
  மதுரையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க திரண்ட பெண்கள்: விண்ணப்பங்கள் வாங்க மறுப்பு தற்காலிக ஆசிரியர் பணியிடத் துக்கு விண்ணப்பிக்க மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திரண்ட 'டெட்' தேர்ச்சி பெற்றவர்களிடம் உயர் நீதிமன்ற இடைக்காலத் தடையால் விண்ணப்பங்கள் வாங்க அதி காரிகள் மறுத்தனர். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் காலிப் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்பப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. இதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு எழுந்தது. உயர் நீதிமன்றக் கிளையும் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனிடையே பள்ளிக் கல்வித் துறை திருத்தப்பட்ட வழிகாட்டு தல்களை வெளியிட்டது. அதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே தற் காலிக ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிட்டது. அதன்படி ஜூலை 4 முதல் 6-ம் தேதி வரை விண் ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப் பிக்க நூற்றுக்கணக்கான பெண்கள் நேற
Image
  தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிடுங்க.. கலெக்டர் அலுவலகத்தில் மனு..! பள்ளிக் கல்வித்துறையின் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட வேண்டும் என்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியானவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர். திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. இதில், கடந்த 2013, 2014, 2017, 2019-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தினர் மனு கொடுத்தனர். அந்த மனுவில், "ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, கடந்த 2013-ம் ஆண்டு முதல் இன்று வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், நிரந்தர பணி வேண்டி காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தற்காலிக ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகம் முன் கடந்த 3 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் முடிவில், எங்கள் குழு சார்பாக முதல்வரின் தனிச்செயலர் இடம் பேச்சுவார்த்தை
Image
  வயர்மேன் ஹெல்பர் தகுதி தேர்வு வரும் 26 வரை விண்ணப்பிக்கலாம் வயர்மேன் ஹெல்பர் தகுதி தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் அறிவிக்கப்பட்டுள்ள மின் கம்பியாள் உதவியாளர் (வயர்மேன் ஹெல்பர் - காம்ப்படென்சி தேர்வு) தகுதி தேர்வு, செப்., 24 மற்றும், 25ல் நடக்கிறது. தகுதி வாய்ந்த மின் கம்பியாள் உதவியாளர்கள், தொழிலாளர்களுக்கான மாலைநேர வகுப்பில் மின் கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவர்கள், இத்துறையால் நடத்தப்பட்ட மின்சார பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.மின் ஒயரிங் தொழிலில், 5 ஆண்டுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில், 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. விண்ணப்பம் மற்றும் விளக்க குறிப்பேட்டை, https://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.ஏதாவது ஒரு தேர்வு மையத்தை தேர்வு செய்து, விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.  போதுமான விண்ணப்பம் வராவிட்டால், தேர்வு மையங்களில் மாற்றம் இருக்கும்