Posts

Showing posts from July 4, 2022
Image
 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை 2 லட்சத்து 13 ஆயிரத்து 893 பேர் எழுதியுள்ளனர். முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு மற்றும் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. முடிவுகள் தெரிந்து கொள்ள வேண்டிய இணையதள முகவரி www.trb.rn.nic.in
Image
  கவுரவ விரிவுரையாளர்கள் மாற்று பணி ஆணை ரத்து கவுரவ விரிவுரையாளர்களின் மாற்று பணி ஆணையை ரத்து செய்து கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஏற்கனவே வெளியிட்ட அரசாணையில் அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் சுழற்சி -1ல் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 2022-23ம் கல்வியாண்டிற்கு ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை ஜூன் 2022 தவிர்த்து 11 மாதங்களுக்கு அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கி ஆணையிடப்பட்டதை தொடர்ந்து, கல்லூரி கல்வி இயக்குநரின் செயல் முறைகளின்படி நிர்வாக காரணங்களுக்காக பணிபுரிய ஒப்பளிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்களின் மாற்றுப்பணி ஆணை இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
  இந்த மாத இறுதியில்'குரூப் - 2' தேர்வு முடிவு? டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 2' முதல்நிலை தேர்வு முடிவுகள், இந்த மாத இறுதியில் வெளியாகும் என, தேர்வர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 'குரூப் - 2, 2 ஏ' பிரிவில், 5,529 பணியிடங்களுக்கான முதல் நிலை தகுதி தேர்வு, மே, 21ல் நடந்தது. இந்த தேர்வில், மாநிலம் முழுதும், 9.95 லட்சம் பேர் பங்கேற்றனர்.தேர்வு முடிவுகளை ஜூனில் வெளியிட டி.என்.பி.எஸ்.சி., திட்டமிட்டுஇருந்தது. பின், இம்மாதம் தேர்வு முடிவு வெளியாகும் என, டி.என்.பி.எஸ்.சி.,யின் உத்தேச தேர்வு முடிவு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூலை 24ல் குரூப் - 4 தேர்வு நடக்க உள்ளதால், தேர்வர்கள் நலன் கருதி ஜூலை இறுதியில், குரூப் - 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Image
  முதல்வர் அறிவுறுத்தல்படியே தற்காலிக ஆசிரியர் நியமனம்! விரைவில் நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் -அன்பில் சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படியே தற்காலிக ஆசிரியர் நியமனங்கள் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்யவும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊதியம் என்ற அடிப்படையில் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றம் உத்தரவு இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள், அதேபோன்று ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த பணிநியமனங்களை அந்த
Image
  தற்காலிக ஆசிரியர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு இன்று முதல் 6ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13 ஆயிரத்து 331 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 10,000 தொகுப்பூதிய அடிப்படையில் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும், 3188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 12ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கும், அதேபோல இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர் பணியி
Image
  2013 ஆசிரியா் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவா்களை நிரந்தர ஆசிரியா்களாக பணி நியமனம் செய்ய கோரிக்கை கடந்த 2013-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவா்களை நிரந்தர ஆசிரியா்களாக நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 2013-ஆம் ஆண்டில் ஆசிரியா் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவா்கள் சாா்பில், செருவாவிடுதி ப. பாலசுப்பிரமணியன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: திமுக தோதல் அறிக்கையில் 2013-ஆம் ஆண்டில் ஆசிரியா் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, காத்திருப்பவா்களை ஆட்சிக்கு வந்தால் பணி நியமனம் செய்வோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதற்கு மாறாக, தற்காலிக ஆசிரியா் நியமனம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னால் தேர்ச்சி பெற்ற பலரும் பணி நியமனம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் இதுவரை காத்திருந்த நிலையில், அரசின் அறிவிப்பு அதிா்ச்சியளிப்பதாக உள்ளது. மேலும் 2023, ஜனவரியிலிருந்து ஆசிரியா் பணி நியமனத்துககான வயது உச்சவரம்பு 47 எனக் கூறப்படுகிறது. தோச்சி பெற்று காத்திருப்போரில் பெரும்பாலானவா்கள் தற்போது 45 வயதைக்