தமிழ் வழியில் படித்தவர்களை மண்டை காய விடும் தமிழக அரசு பணி தேர்வாணையம் - ஒரே அறிவிப்பில் இவ்வளோ குழப்பமா? தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் 20% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதிலும் சிலர் ஒரு டிகிரி மட்டும் தமிழில் படித்துவிட்டு இடஒதுக்கீடு கேட்டதால், 1ஆம் வகுப்பு முதல் தகுதிப் படிப்பு வரை தமிழ்வழியில் படித்தால் மட்டுமே தமிழ்வழி இடஒதுக்கீட்டுக்கு தகுதி பெறுவர் என கோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட உதவி ஆய்வாளர் பணிக்கான அறிவிப்பில், தமிழ்வழி இடஒதுக்கீட்டை பெற வேண்டுமெனில், பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, முதல் இளநிலைப் பட்டம் தமிழ்வழியில் பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவது பட்டப்படிப்பை ஆங்கிலவழியில் படித்துவிட்டு, இரண்டாவதை தமிழ்வழியில் கணக்கில் கொள்ள முடியாது என சொல்ல வருகிறார்கள். இதற்கிடையில், தேர்வர்களின் சந்தேகங்களை விளக்கும் விதமாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டிருக்கும் "Frequently asked questions" ஆவணத்தில் முதல் பட்டப்படிப்பை ஆங்கிலவழியில் படித்துவிட்டு, இரண்டாவது பட்டப்படிப்பை தொலைநிலைக் ...
Posts
Showing posts from July 3, 2022
- Get link
- X
- Other Apps
Part Time BE Admission: பகுதிநேர இஞ்சினியரிங் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே! தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் கோயம்புத்தூர் அரசினர் பொறியியற் கல்லூரி, சேலம் அரசினர் பொறியியற் கல்லூரி,திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி,வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரி, பர்கூர் அரசினர் பொறியியற் கல்லூரி, பி.எஸ்.ஜி.பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர், கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜர் பொறியியற் கல்லூரி உள்ளிட்ட 9 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு முடித்த, பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர B.E., B.Tech பட்டப்படிப்புகளுக்கு நாளை (04/07/2022) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. விண்ணப்பதாரர்கள் பட்டயப்படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பவர்களாகவோ இரண்டு ஆண்டுக்கு ...
- Get link
- X
- Other Apps
M.E, M.Tech படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தொடக்கம்: அண்ணா பல்கலைக்கழகம் M.E, M.Tech படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கியுள்ளது. M.E, M.Tech, M.Plan, M.Arch படிப்புகளில் சேர www.annauniv.edu/tanca2022 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. TANCET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
- Get link
- X
- Other Apps
தற்காலிக ஆசிரியா் பணிக்கு மாவட்டக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் தற்காலிக ஆசிரியா் பணியிடத்துக்கு, மாவட்ட கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் முதன்மை கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ஆம் கல்வியாண்டில் ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் பணியிடங்கள் தற்காலிக முறையில் நியமனம் செய்யப்பட உள்ளன. தகுதியான விண்ணப்பதாரா்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் அந்தந்த (நாமக்கல், திருச்செங்கோடு) மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும். காலிப்பணியிட விவரங்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் வெளியிடப்படும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 6-ஆம் தேதி பிற்பகல் 5 மணி ...
- Get link
- X
- Other Apps
திருப்தி இல்லை என்றால்... ஆசிரியர்கள் உடனே டிஸ்மிஸ்... அரசு தடாலடி அறிவிப்பு..!!!! தற்காலிக ஆசிரியர்களின் நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சற்றுமுன் வெளியிட்டு இருந்தார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,300 பணியிடங்களில் தற்காலியாக ஆசிரியர்களை பணிநியமானம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வி ஆணையர் கடந்த வாரம் வெளியிட்டு இருந்தார். அதில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என்று மூன்று வகையான ஆசிரியர்கள் நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த பணியமனத்தை அந்தந்த பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாக குழு மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அடிப்படையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள...
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வு திருத்தம் செய்ய அவகாசம் சென்னை:ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பத்தில் வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை திருத்தம் செய்து கொள்ள, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு, ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில், மார்ச் 7ல் வெளியிடப்பட்டது. இணையதளம் வழியாக விண்ணப்பிக்க, ஏப்., 26 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.ஆசிரியர் தகுதித்தாள் ஒன்றுக்கு, 2.30 லட்சம் பேர்; தாள் இரண்டுக்கு 4.02 லட்சம் பேர் என, மொத்தம், 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மனு அளித்துள்ளனர். அதை ஏற்று, வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம்.இனி வரும் காலங்களில், திருத்தம் தொடர்பாக, எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படாது என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
- Get link
- X
- Other Apps
2,200 காலி பணியிடங்கள்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு. மத்திய அரசின் நவோதயா பள்ளிக்கூடங்களில் 2200 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாட ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர், தலைமை ஆசிரியர், நூலகர்,கலை மற்றும் இசை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் cbseitms.nic.in என்ற அரசு இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஆங்கிலம் மற்றும் இந்தியில் தட்டச்சு முடித்தவர்கள், இளநிலை, முதுகலை பட்டம், பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள். தேர்வு செய்யப்படும் முறை: சி பி டி தேர்வு, நேர்முகத் தேர்வு, திறன் தேர்வு, தட்டச்சு தேர்வு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு.
- Get link
- X
- Other Apps
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை (பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள்) மற்றும் இதரப் படிப்புகளுக்கு 2022-23ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. சேர்க்கைக்கான கல்வித்தகுதி மற்றும் கட்டணம் சம்பந்தப்பட்ட விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தின் https://tnou.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி பயில விரும்பும் மாணவர்களின் நலன் கருதி வாரத்தின் ஏழுநாட்களிலும் (அரசு விடுமுறை நாள் உட்பட) பல்கலைக்கழக வளாகம் , விழுப்புரம், தர்மபுரி, கோயம்புத்தூர், மதுரை, ஊட்டி, திருநெல்வேலி, திருச்சி, சேலம், திருவண்ணாமலை, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மண்டல மையங்களில் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. மேலும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்...
- Get link
- X
- Other Apps
தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் - ஜூலை 6 கடைசி நாள் - பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமணம் செய்ய கடந்த வாரம் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.அதன்படி,அரசு தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும்,5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.10,000 தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும், 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.12,000 தொகுப்பூதிய அடிப்படையிலும் நியமனம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால்,இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில்,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.இதனையடுத்து,அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி,இடைநிலை ஆசிரியர் பதவிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுதாள் 1-ல் தேர்ச்சி பெற்றி...