TNPSC, சீரூடைப் பணியாளர் தேர்வுகளில் தமிழ்வழி இடஒதுக்கீடு தொடர்பாக சர்ச்சை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில், தமிழ்வழி இடஒதுக்கீடு என்பது முறையாக பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் ஏற்படும் சமவாய்ப்பின்மையை நீக்குவதற்காக, மாநில அரசு பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க, 2010-ஆம் ஆண்டில் தமிழக அரசு சட்டம் கொண்டுவந்தது. இந்நிலையில், தமிழ்வழி இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தது. அதில், அரசு பணிகளில் இடஒதுக்கீட்டைப் பெற, ஒன்றாம் வகுப்பு முதல் தகுதிப்படிப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும், தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் அரசின் உதவித்தொகையை பெற்றிருப்பார்கள். எனவே, அந்த சான்றிதழை டிஎன்பிஎஸ்சி பெற்று இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறியது. ஆனால், தேர்வர்களின் சந்தேகங்களை விளக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட "Frequently asked questions" என்ற ஆவணத்தில், உதவித்தொக...