
அரசுப் பள்ளிகளில் 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்-அமைச்சர் அன்பில் மகேஸ் அரசுப் பள்ளிகளில் புதிதாக 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பசுமைவழிச் சாலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், 350 மாணவர்களுக்கு தலா ரூ.3,000 கல்வி ஊக்கத்தொகை மற்றும் அவர்களின் பெற்றோருக்கு பரிசுகளையும் வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சர் என்றால் அது நம் முதலமைச்சர் ஸ்டாலின் தான். கல்விக்கு ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள், உயர்கல்வியைத் தொடருகிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டியது ஓர் அரசின் கடமை. ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வந்த உடன், கல்விக்காக சில திட்டங்களை கொண்டுவரு...