3,552 பணியிடங்களுக்கான சீருடை பணியாளர் தேர்வு - நாளை அறிவிப்பு. இரண்டாம் நிலைக் காவலர் , சிறைக் காவலர் , தீயணைப்பு ஆகிய 3,552 பணியிடங்களுக்கான நேரடித் தேர்வுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு நாளை வெளியிடுகிறது. www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆக .15 ஆம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
Posts
Showing posts from June 29, 2022
- Get link
- X
- Other Apps
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது மற்றும் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள வேண்டிய இணையதள முகவரி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு டெர்ம் 2 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி வாரியம் 10 ஆம் வகுப்பு முடிவுகளை ஜூலை 4 ஆம் தேதி அறிவிக்கும், அதே நேரத்தில் 12 ஆம் வகுப்பு ஜூலை 10 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சக வட்டார தகவல்கள் கூறுகின்றன. சிபிஎஸ்இ டெர்ம் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் முடிவுகளை cbse.gov.in மற்றும் cbresults.nic.in ஆகியவற்றைப் சரிப்பார்க்கலாம். சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் தேர்வு முடிவுகள் 2022ஐ எவ்வாறு சரிபார்ப்பது என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள் *முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பார்வையிடவும்- cbse.gov.in, cbresults.nic.in * பிறகு 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணைப்பை கிளிக் செய்யவும் * பதிவு எண்/ ரோல் எண்ணை உள்ளிடவும் * 10, 12 ஆம் வகுப்பு முடிவுகள் 2022 திரையில் தோன்றும் * பின்னர் 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அட
- Get link
- X
- Other Apps
ஊழலுக்கு வழிவகை செய்யும் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை கைவிட வேண்டும்.. விஜயகாந்த் வலியுறுத்தல்.!! ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்ற அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது. 2013 , 2014, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று, கடந்த ஒன்பது ஆண்டுகளாக அரசுப்பணிக்காக காத்து கிடக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்ததாகவும், தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதை கவனத்தில் கொண்டு வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும
- Get link
- X
- Other Apps
இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவு ஒரு லட்சத்தை தாண்டியது தமிழக இன்ஜினியரிங் சேர்க்கை கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, அரசின் சார்பில், 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இம்மாதம், 20ம் தேதி துவங்கியது. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான நாள் முதல், மாணவர்கள் படிப்படியாக தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். நேற்று மாலை நிலவரப்படி, விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.அதாவது, ஒரு லட்சத்து 1,916 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர்; 59 ஆயிரம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர்; 31 ஆயிரம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் என, கவுன்சிலிங் குழு தெரிவித்து உள்ளது. கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க, ஜூலை 19 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
TNPSC Group 1 Result 2022: வெளியானது குரூப் 1 தேர்வு முடிவுகள்.. காண்பது எப்படி? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் தேர்வு செய்யப்படுவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 1 (குரூப் - 1) முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நேர்காணல் தேர்வுக்கு 137 பேர் தேரு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. துணை ஆட்சியர், காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 66 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்தத் தேர்வை, மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு மே 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்
- Get link
- X
- Other Apps
துறைத்தேர்வு உத்தேச விடை குறிப்பு வெளியீடு அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வின் உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு ஊழியர்களுக்கு 151 துறை தேர்வுகள் இந்த மாதம் 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்டன. அதில் 122 தேர்வுகளின் உத்தேச விடை குறிப்புகள் www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மீது ஆட்சேபனைகள் இருந்தால் உரிய ஆதாரங்களுடன் இன்று முதல் ஜூலை 5ம் தேதிக்குள் contacttnpsc@gmail.com என்ற இ- - மெயில் முகவரிக்கு மனுக்கள் அனுப்பலாம். கடிதம்வழியே ஆட்சேபனை தெரிவித்தால் ஏற்று கொள்ளப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
ஆசிரியா் தகுதித் தோவில் தோச்சி பெற்றவா்கள் உண்ணாவிரதம் அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்கள் நியமனம் செய்யப்படுவதைக் கண்டித்து ஆசிரியா் தகுதித் தோவில் தோச்சி பெற்றவா்களின் கூட்டமைப்பு சாா்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா். இது குறித்து ஆசிரியா் தகுதித் தோவில் தோச்சி பெற்ற ஆசிரியா்கள் சிலா் கூறியது: "கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் ஆசிரியா் தகுதித் தோவில் தகுதி பெற்ற 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஆசிரியா்கள் பணிக்காக காத்திருக்கிறோம். இதற்கிடையே ஆசிரியா் தோவில் தகுதி பெற்றவா்கள் பணிக்காக, மீண்டும் ஒரு போட்டித் தோவு எழுத வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையா் 13,331 பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் எட்டு மாதத்திற்கு நியமனம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் பிளஸ் 2 வகுப்பு மற்றும் பட்டம் பெற்றவா்களை பணியில் நியமிக்க உள்ளதாகவும் கூறியுள்ளனா். அரசின் இந்த நடவடிக்கை எங்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியா் தகுதித் தோவில் தோச
- Get link
- X
- Other Apps
தற்காலிக ஆசிரியா்கள் நியமனம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்வது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியா் பணிகளில் 13,331 காலியிடங்கள் நிலவுகின்றன. இவற்றை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியா்களை கொண்டு தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதற்கான பணிகள் தற்போது பள்ளிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே இடைநிலை, பட்டதாரி ஆசிரியருக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு ஜூலை 7, 8-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. அதனால் மாறுதல் கலந்தாய்வு முடிந்தபின் தற்காலிக ஆசிரியா் பணிநியமனத்தை மேற்கொள்ள வேண்டுமெனகோரிக்கைகள் எழுந்தன. அதையேற்று தற்காலிக ஆசிரியா் பணி நியமனம் சாா்ந்த புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்ட பின்பு தற்காலிக ஆசிரியா் பணிநியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும்.