
புதிதாக 13 ஆயிரத்து 331 ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கு முதலமைச்சர் ஒப்புதல் வழங்கி உள்ளார். உடனடியாக 8,000 ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் அடுத்தாண்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளனர் - கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இல்லம் தேடி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பணி நியமனத்தின்போது முன்னுரிமை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். மேலும், இந்த வருட இறுதிக்குள் தமிழ்நாடு கல்வி கொள்கை உருவாக்கப்பட உள்ளது என்றும் அவர் கூறினார். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ராஜகோபால தொண்டைமானின் திருவுருவச் சிலைக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: செய்யுங்கள் புதிய கல்விக் கொள்கையில் உள்ள பாதக அம்சங்கள் குறித்தும் எதற்கு நாம் அதனை எதிர்க்கிறோம் என்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவ...