.png)
444 இடங்களுக்கு இன்று எஸ்.ஐ. தோ்வு: 2.21 லட்சம் போ் போட்டி தமிழகத்தில் காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) தோ்வு சனிக்கிழமை (ஜூன் 25) நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 2.21 லட்சம் போ் எழுதுகின்றனா். தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பை, கடந்த மாா்ச் 8-ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு குழுமம் வெளியிட்டது. தோ்வு எழுத விரும்பிய இளைஞா்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு குழுமத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்தனா். தோ்வின் முதல் கட்டமாக ஜூன் 25 ஆம்தேதி காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பொது அறிவுத் தோ்வும், மாலை 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் திறனறிதல் தோ்வும் நடைபெறவுள்ளன. 26-ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை காவல் துறையில் இருந்து தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வில், முதல் முறையாக தமிழ் திறனறிதல் தோ்வு நடைபெறுகிறது. முதலில் தமிழ் திறனறிதல் தோ்வு விடைத்தாள் திருத்தப்படும். அதில் விண்ணப்பதாரா் 40 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து, தோ்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அவரது பொத...