Posts

Showing posts from June 23, 2022
Image
  13331 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்ப உத்தரவு!   தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தற்காலிக ஆசிரியர்கள்: அரசு பள்ளிகளில் 13331 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவு. இடைநிலை ஆசிரியர் 7500 ரூபாய். பட்டதாரி ஆசிரியர் 10000 ரூபாய்.  முதுகலை பட்டதாரி ஆசிரியர் 125000 ரூபாய்  சம்பளம் வழங்கவும் நடவடிக்கை. ஜூலை 1ஆம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு. 13 331ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  இது ஆசிரியர் பணியை எதிர்நோக்கி காத்திருக்கும் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Image
  அரசு பள்ளிகளில் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் : அமைச்சர் மகேஷ் பேட்டி மதுரை : ''அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப விரைவில் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என, மதுரையில் கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: கல்வித்துறை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்ல பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆரம்ப கல்வியை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் 2025ல் இத்துறை சிறப்பான இடத்தில் இருக்கும். தொடக்க கல்விக்கு என தனி நிர்வாகம் ஏற்படுத்தும் திட்டம் தற்போது இல்லை.அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர் சேர்க்கைக்கு ஏற்பவும், இந்தாண்டு ஓய்வு பெறும் ஆசிரியர் காலியிடங்களை சேர்த்தும் விரைவில் ஆசிரியர்கள் நிரப்பப்படுவர். பொதுத் தேர்வு தோல்வியால் மாணவர்கள் தற்கொலை செய்தது வருத்தமளிக்கிறது. தேசிய கல்விக் கொள்கை வேண்டாம் என்று தான் மாநில கல்விக் கொள்கை பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. மாணவர்களுக்கு எது சரியாக இருக்கும் என்பதை முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார். அரசு பள்ளிகளில் இடியும் நிலையில் இருந்த 10,031 வகுப்பறைகள் இடிக்கப்பட்டுள்ளன. அடுத்...
Image
  Paramedical Courses: துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கைக்கு அறிவிப்பு.. 12-ஆம் வகுப்பு தேர்ச்சியா? இதையும் செக் பண்ணுங்க.. அறிவிப்பு: தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 2022-23ஆம் ஆண்டுக்கான துணை மருத்துவ பயிற்சிசிகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பாடப்பிரிவு மற்றும் பயிற்சி காலம்: B.Sc OPTOMETERY - 4 வருடம் B.Sc NURSING - 4 வருடம் B.Sc PHYSICIAN ASSISTANT - 4 வருடம் B.Sc OPERATION THEATRE AND ANESTHESIA TECHNOLOGY- 4 வருடம் BNYS - 4 ½ வருடம் கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பில் கணிதம்/அறிவியல் பாடப் பிரிவுகளில் 45 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மலை சாதியினருக்கு வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. குறிப்பு: ஒன்றுக்கு மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பம் போதுமானதாகும். மேற்படிப்பிற்கான ஆலோசனை கட்டணமின்றி வழங்கப்படுகிறது. கலந்துரை மற்றும் ஆலோசனை மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, தகுந்த கல்லூரிகளில், நிபந்தனையுடன...
Image
  பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.! சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தகவல் உதவி மையத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் பொன்முடி தெரிவித்ததாவது; "பொறியியல் சேர்க்கைக்கு நேற்று வரை 42,716 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் பொறியியல் காலியிடங்கள் உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இன்று (23-ம் தேதி) முதல் ஜூலை 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான நடைமுறை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஜூலை மாதம் கடைசியில் சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாமதம் ஆனால் மாணவர் சேர்க்கைக்கு தாமதம் ஏற்படும். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வந்த பின்னர் அடுத்த 5 நாட்களுக்கு கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு செய்ய நாட்கள் நீட்டிக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
Image
  துணைத்தேர்வுக்கு மாணவர்கள் இந்த தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.!! பொதுதேர்வெழுதிய மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 27.06.2022 (திங்கட்கிழமை) முதல் 04.07.2022 (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் (03.07.2022 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் 27.06.2022 (திங்கட்கிழமை) முதல் 04.07.2022 (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் (03.07.2022 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான் பின் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணைய...
Image
  தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு 9,494 காலி பணி இடங்கள்.! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்.! அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவி ல் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்,. மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி; தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அரசுப்பள்ளிகளை நோக்கி நிறைய குழந்தைகள் வர தொடங்கியுள்ளனர். இதன் அடிப்படையில்தான் LKG, UKG வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிஎஸ்ஆர் மூலமாகவும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடும் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன. அரசுப் பள்ளிகளில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள் இந்த ஆண்டு 9,494 பேர் தேவைப்படுகிறது என்பதை ஆசிரியர் தேர்வாணையத்திற்குத் தெரிவித்துள்ளோம். இந்த ஆண்டு நிறைய ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். இதையெல்லாம் கணக்கில் கொண்டு பணியிடங்கள் நிரப்பப்படும். ரீடிங் மாரத்தான் மூலம்...
Image
  மாணவர்கள் கவனத்திற்கு...நாளை முதல் இந்த சான்றிதழ் பெறலாம்;ஜூன் 29-ம் தேதி இதற்கு கடைசி நாள் - அரசு தேர்வுகள் இயக்ககம்! 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம். தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று முன்தினம் வெளியிட்டார்.அதன்படி,தமிழகம்,புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்தனர்.12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.இதுபோன்று தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.10-வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனைத்தொடர்ந்து,10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 24 முதல் வழங்கப்படும் என்றும் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 27-ல் தொடங்கும் என்றும் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2-ல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி,,10,1...