Posts

Showing posts from June 21, 2022
  மருத்துவத் துறையில் 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவத் துறையில் உள்ள 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் செப்டம்பர் மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த போதமலையில் உள்ள கெடமலை கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் பங்கேற்றார். முன்னதாக, மலைக் கிராமத்திற்கு புறப்பட்ட அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்த மருத்துவர் சண்முகவடிவு பணி நேரத்தில் பணியில் இல்லாதாததும், மருத்துவர் தினகரன் அவரது மகனை அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபடுத்திய காரணத்திற்காக இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவத் துறையில் உள்ள 4,000 ஆயிரம் காலி பணியிடங்கள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மருத்துவத் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும். நாமக்கல் மாவட்டத்தில்
Image
  கடினமான கணித வினாத்தாள், பாடத்திட்ட குழப்பத்தால் 10-ம் வகுப்பு தேர்ச்சி சரிவு - இதுவரை இல்லாத அளவுக்கு 5% வரை குறைந்தது பாடத்திட்டக் குழப்பம், கடினமான கணித வினாத்தாள் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இதுவரை இல்லாத அளவுக்கு 5 சதவீதம் வரை தேர்ச்சி குறைந்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். தமிழகப் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே 6 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 9.12 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதில் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 2019-ம் ஆண்டைவிட 5 சதவீதம் குறைவாகும். வழக்கத்தை விட தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு பாடத்திட்டக் குழப்பம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர். இதுகுறித்து கல்வியாளர் செல்வக்குமார் கூறியதாவது: 10-ம் வகுப்பு தேர்ச்சி சரிவதற்கு அரசுப் பள்ளிகளின் பின்னடைவு முக்கிய காரணம். ஏனெனில், 10-ம் வகுப்பு தேர்வெழுதிய 9.12 லட்சம் மாணவர்களில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 90,626 பேர் தோல்வி அடைந்துள்ளனர். அதில் அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டும் 57,437 (63%) பேர். ஒட
Image
  ரூ.1.43 கோடி செலவழித்து 'மொக்கை' பயிற்சி; பள்ளிக்கல்வி துறை மீது ஆசிரியர்கள் அதிருப்தி சென்னை----அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி என்ற பெயரில், 1.43 கோடி ரூபாய் செலவில், நேற்று முன்தினம் நடத்தப்பட்ட, 'யு டியூப்' வீடியோ நிகழ்ச்சியால், ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டாகவே, பள்ளிக்கல்வித் துறை பல்வேறு சர்ச்சைகளுடன் நகர்ந்து வருகிறது.மாணவர்களிடையே ஜாதி பிரச்னை, பாலியல் பிரச்னை, மது குடித்து தகராறு, ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை, போராட்டம், ஆர்ப்பாட்டம், வகுப்பு, பணி புறக்கணிப்பு தினசரி நிகழ்வாக உள்ளது.புதிய கல்வி ஆண்டிலாவது இந்த நிலைமை மாறும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதற்கு மாறாக துறையின் செயல்பாடுகள் நடந்து வருகின்றன.கடந்த, 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட பின், முதல் சனிக்கிழமையான நேற்று முன்தினம், மாநிலம் முழுதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க அமைக்கப்பட்ட கணினி அறைகளில், ஆசிரியர்கள் கூட்டமாக அமர
Image
  கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000; தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற உத்தரவு அரசுப்பள்ளிகளில் படித்து, தற்போது கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும், உயர்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், மாணவிகளின் கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்தமைக்கான சான்று உள்ளிட்டவற்றுடன் வங்கிக்கணக்கு விவரம் ஆகியவற்றை பெற ஆணையிடப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற வேண்டும் என்றும் சமூகநலத்துறையின் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பதால், சான்றிதழ்களை பெறும் பணியை விரைந்து செயல்படுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது. சான்றிதழ்களை பெற்ற உடன், அவற்றை சரிபார்க்கும் பணி தொடங்கும். கல்வி வளர்ச்சி நாளாக அனுச