Posts

Showing posts from June 20, 2022
Image
  10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூன் 24ஆம் தேதி வெளியீடு 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் வரும் ஜூன் 24ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் வரும் 24ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில், மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்காக மதிப்பெண் சான்றிதழ்கள் தேவைப்படுவதால்; தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வுத்துறை இணையதளத்தில் வரும் 24ஆம் தேதி வெளியீடு வெளியிடப்பட இருக்கிறது. மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் சேது ராமவர்மா தெரிவித்துள்ளார். தேர்வில் தோல்வி அடைந்த 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உடனடித் தேர்வுகள் ஜூலை 25ம் தேதியிலிருந்து நடைபெறும் எனவும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உடனடித் தேர்வுகள் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் தெரிவிக...
Image
  அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர 22-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வரும் 22ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே 27ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் 22ம் தேதியில் இருந்து விண்ணப்ப பதிவு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tngasa.in என்கிற இணையதள பக்கத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னதாக, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 12ம் வகுப்பில் மொத்தம் 8,06,277 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும். 7499 மேல்நிலைப் பள்ளிகளில், 2628 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை மட்டும் 246 ஆகும். கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பெற்ற மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்கள்/ அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்கள் மதிப்பெண் மறுகூட்டல்/விடைத்தாள்கள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தாங்கள் விரும்பிய கல்லூரிகளில் நிர...
Image
  பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்டில் உடனடிதேர்வு!! பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்டில் உடனடிதேர்வு வைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 12ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% கூடுதல் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வெழுதிய மொத்த மாணக்கர்களின் எண்ணிக்கை : 8,06,277 மாணவியர்களின் எண்ணிக்கை :421,622 மாணவர்களின் எண்ணிக்கை:3,84,655 தேர்ச்சி விவரங்கள் தேர்ச்சிப் பெற்றவர்கள் :7,55,998(93.76%) * மாணவியர் 4,06,105(96.32%) தேர்ச்சி அடைந்துள்ளனர். * மாணவர்கள் 3,49,893(90.96%) தேர்ச்சி அடைந்துள்ளனர். * மாணவர்களை விட மாணவியர் 5.36% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் - 2020-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணக்கர் 7,99,71. தேர்ச்சிப் பெற்றோர் 7,20,209. தேர்ச்சிச் சதவிகிதம் 92.3% இந்நிலையில் பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்டில் உடனடிதேர்வு என்று த...
Image
BE கலந்தாய்வு - தொடங்கியது ஆன்லைன் விண்ணப்ப பதிவு;இங்கே விவரம்! தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளது.இந்நிலையில்,பொறியியல் கல்லூரிகளில் பி.இ.,பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் பதிவு முறை தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி,பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணைய தளம் மூலம் ஜூலை 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.குறிப்பாக,அரசுப்பள்ளி,தனியார் பள்ளிகள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்,மேலும்,இதற்காக 110 சிறப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து, ஜூலை 20-31 ஆம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதனிடையே,ஜூலை 22 ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும். இதனையடுத்து,ஆக.8 ஆம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு ஆக.16 ஆம் தேதி முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில்,அனைத்து கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களிலும் 69% இட ஒதுக்கீடு உறுதியாக பின்பற்றப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்...