Posts

Showing posts from June 19, 2022
Image
  11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி நாளை அறிவிப்பு. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை நாளை சென்னையில் வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ். இணையதளங்கள், பள்ளிகள், SMS, பொது நூலகங்களில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.  11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கபௌபட்டுள்ளது.
Image
  கரோனாவால் தொடரும் நிதி நெருக்கடியை சமாளிக்க புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை நிதி நெருக்கடியை சமாளிக்க பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் 283 அரசுப்பள்ளிகளும், 32 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 181 தனியார் பள்ளிகளும் உள்ளன. மொத்தமுள்ள 57 சதவீத அரசுப் பள்ளிகளில் 32 சதவீத மாணவர்களே படிக்கின்றனர். மேலும், அரசுப் பள்ளிகளில் கிட்டத் தட்ட 3 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். எனினும் அதிகளவில் தனியார் பள்ளிகளில் குழந்தைகள் படித்து வந்தனர். இச்சூழலில், கரோனா தாக்கத் தால் பள்ளி, கல்லூரி மூடப்பட்டு இரு ஆண்டுகள் ஆன்லைனில் வகுப்புகள் நடந்தாலும், கடந்த கல்வியாண்டு இறுதியில் பள்ளிகள் செயல்படத் தொடங்கின. புதுச்சேரியில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 23-ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள் ளன. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. நகரப் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் அதிகளவில் சேருகின்றனர். ஒன்று முதல் 9-ம் வகுப்ப
Image
  மின்வாரியத்தில் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்"- அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு! தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப விரைவில் நிரப்பப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மின்னகம் நுகர்வோர் சேவை தொடங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில்,அதனை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்: "தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன எனவும்,சென்னையில் தொடங்கப்பட்ட மின்னகம் மூலம் அப்புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாகவும்,ஒரே நேரத்தில் ஒரு லட்சம் அழைப்புகள் வந்தாலும்,அதை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி:"கடலில் காற்றாலை தயாரிக்கும் பணி தொடர்பாக 5 நாள் அரசு முறை பயணமாக இன்று ஸ்காட்லாந்து,லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 5 பேர் கொண்ட
Image
  10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 17 லட்சத்துக்கு 92 ஆயிரத்து 450 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இவர்களில் சுமார் 16 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளே தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது.அந்த வகையில் அவர்களின் விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, கடந்த 1-ந்தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் நடந்தது. அதன்படி, கடந்த 9-ந்தேதியுடன் அந்த பணிகளும் முடிந்தது . இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகள் நாளை (ஜூன் 20) வெளியிடப்பட உள்ளன. அதன்படி பிளஸ் 2- தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கும், 10-ம் வகுப்புதேர்வு முடிவுகள் மதியம் 12 மணிக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகும். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.
Image
  இடைநிலை ஆசிரியா்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் இட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுமா? ஆசிரியா்கள் எதிா்பாா்ப்பு இடைநிலை ஆசிரியா்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் இட மாறுதல் கலந்தாய்வு நடப்பாண்டில் நடத்தப்படுமா ?என ஆசிரியா்கள் எதிா்பாா்பில் உள்ளனா். கரோனா அலை பரவியதையடுத்து தமிழகத்தில் பள்ளிகள் முறையாக செயல்படவில்லை. இந்நிலையில் கரோனா அலை குறைந்ததும் கடந்த ஆண்டு ஆகஸ்டு முதல் பள்ளி, கல்லூரி செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியில் ஆசிரியா்கள் பதவி உயா்வு மற்றும் இடம் மாறுதல் கலந்தாய்வு முறையாக நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டதும் பதவி உயா்வு மற்றும் இடமாறுதல் உள்ளிஙிட்ட அனைத்து கவுன்சிலிங்களை நடத்திட வேண்டும் என ஆசிரியா்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியா்கள் வலியுறுத்தினா். இதையடுத்து கடந்த மாா்ச் மாதம் அனைத்து ஆசிரியா்களுக்கும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் மழை சுழற்சி மாறுதலில் குழப்பம் நிலவியதால் ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு நடத்துவது நிறுத்தம் செய்யப்பட்டு பின்னா் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் இடைநிலை ஆசிரியா்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுத