தமிழகத்தில் 1,000 பணியிடங்கள்.. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.!!!! தமிழகத்தில் ஆவினில் விரைவில் ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் பேட்டி அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி,திருப்பத்தூர் மாவட்டங்களில் புதிதாக ஆவின் கூட்டுறவு ஒன்றியங்கள் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.மேலும் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து வருகின்ற 27ஆம் தேதி நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் முதல்வர் முடிவு செய்வார் என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் விரைவில் ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Posts
Showing posts from June 18, 2022
- Get link
- X
- Other Apps
முதல் முறையாக கணினி வழித் தோ்வு: நாளை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது முதல் முறையாக கணினி வழித் தோ்வை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) நடத்தவுள்ளது. இதுகுறித்து தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் பதவிக்கான கணினி வழித் தோ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) காலை 9 மணிக்கும், பிற்பகலில் 1.30 மணிக்கும் நடைபெறவுள்ளது. இந்த நேரத்துக்குப் பிறகு வரும் தோ்வா்கள் தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று கிரண் குராலா தெரிவித்துள்ளாா். இதனிடையே, கணினி வழித் தோ்வுக்கான முக்கிய விதிமுறைகளை தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும் எனத் தெரிவித்துள்ளது. தோ்வின் தொடக்கத்தில் 180 நிமிஷங்கள் காண்பிக்கப்படும். இது படிப்படியாகக் குறைந்து, பூஜ்ஜியத்தை அடையும் போது தோ்வு தானாக முடிவடையும். தோ்வானது கணினி அமைப்பால் தானாகவே சமா்ப்பிக்கப்படும். வினாக்கள் ஏறுமுக வரிசைப்படி ஒவ்வொன்றாக கணினித் திரையில் தோன்றும். அதற்கு ஒன்றன் பின் ஒன்ற...
- Get link
- X
- Other Apps
உடனடி தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த 151 மாணவர்களுக்கு - பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக தெரிவிப்பு... சென்னையில் ஆயிரத்து 361 பேர் 10 ஆம் வகுப்பு பொது தேர்வை எழுதவில்லை. அவர்களில் 151 மாணவர்கள் Instant Exam எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நந்தனம் அரசுப்பள்ளியில் 5 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நந்தனம் பள்ளிக்கு வந்து பயிற்சி பெற இயலாத மாணவர்களுக்கு, அவரவர் படித்த பள்ளிகளிலேயே பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பயிற்சிக்கு பின் Instant Exam நடத்தப்பட உள்ளது. இதேபோல் தேர்வு எழுதாத 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் Instant Exam நடத்துவதில் பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.
- Get link
- X
- Other Apps
LKG, UKG Teachers: எல்கேஜி, யூகேஜிக்கு 5,000 சிறப்பாசிரியர்கள்.. யாருக்கு முன்னுரிமை?: அறிவித்த பள்ளிக்கல்வித்துறை எல்கேஜி யூகேஜி வகுப்புகளுக்கு 5,000 சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் கடந்த 2018ஆம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு, தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகளைத் தொடங்கியது. இவ்வாறு மொத்தம் 2,381 பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டு, அவற்றில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் படித்து வந்தனர். எனினும் கொரோனா காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இந்நிலையில் 2022- 23ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த மழலையர் வகுப்புகள் அங்கன்வாடிகளுக்கு மாற்றப்படுவதாகவும், மழலையர் வகுப்புகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த இடைநிலை ஆசிரியர்கள், அவர்கள் ஏற்கனவே பணியாற்றி வந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதாகவும் தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்...
- Get link
- X
- Other Apps
நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை மலைப்பகுதிகளுக்கு பணியிட மாறுதல் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: அரசாணை வெளியீடு நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை மலைப் பகுதிகளுக்கு பணியிட மாறுதல் செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை வருமாறு: * மலை சுழற்சி மாறுதல்கள் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என அனைவருக்கும் பொருந்தும். * அனைத்து ஆசிரியர்களும் மலைப் பகுதிகளில் சுழற்சி முறையின் கீழ் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். மலைப் பகுதியில் தொடர்ந்து பணியாற்ற விரும்புவோரிடம் கடிதம் பெற்று அதே இடத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். இது அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பொருந்தும். * மலைப்பகுதிகளுக்கு ஆசிரியர்கள் மாற்றப்படும் போது ஏற்படும் காலிப் பணியிடங்கள், சமவெளிப் பகுதியில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் ஆகியவற்றை ஒட்டுமொத்த பணியிடங்களாக காட்ட வேண...
- Get link
- X
- Other Apps
கல்வித்துறையில் மாற்றம் தொடக்க, மேல்நிலையை பிரிக்க முடிவு பழைய கஞ்சி... புதிய பானையில்' என்ற கூற்றிற்கு ஏற்ப தமிழக பள்ளிக் கல்வித் துறையில் மாற்றம் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப்பள்ளிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. தனியார், உதவி பெறும் பள்ளிகள் அங்கீகாரம் பெறுதல், புதுப்பித்தல், உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சம்பளம் பெறுதல் போன்று அனைத்திற்கும் அனுமதி அளிக்கும் அதிகாரம் முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து வருகிறது. இதை மீண்டும் பழைய முறைக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.நர்சரி, தொடக்க, நடுநிலை பள்ளிகளை கண்காணிக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், உயர், மேல் நிலை பள்ளிகளை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலரை நியமிக்க உள்ளது. அதே போன்று பள்ளி அங்கீகாரம் பெறுதல், புதுப்பித்தல் போன்றவற்றிற்கு அனுமதிக்கும் அதிகாரம் மீண்டும் இணை இயக்குனருக்கே செல்கிறது. இதற்காக தமிழக அளவில் 9 மண்டலங்களை ஏற்படுத்தி மண்டலத்திற்கு ஒரு இணை இயக்குனரை நியமிக்க உள்ளனர். மதுரையில் இன்று (ஜூன் 18) முதல் 25 வரை கல்வித்துறை இயக்குனர், இணை இ...