10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு எப்போது? சமீபத்தில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு வைக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இது குறித்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அடுத்த மாதம் நடைபெறும் உடனடித் தேர்வில் பங்கேற்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு அடுத்த மாதம் தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது
Posts
Showing posts from June 17, 2022
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் பட்டயப்பயிற்சி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு ஒரு கேள்விக்குறி - 7 ஆண்டுகளில் 414 பயிற்சி நிறுவனங்கள் மூடல்! கடந்த 7 ஆண்டுகளில் 414 பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்த 1 லட்சத்து 84 ஆயிரத்து 470 பேர் வேலைக்கு காத்திருக்கின்றனர். இடைநிலை ஆசிரியர் பட்டயப்பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைக்காததாலும், தொடக்கக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் நியமனம் செய்யப்படாமல் இருப்பதாலும் மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு இணையாக போட்டி போட மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் ஆசிரியர் பட்டயப்பயிற்சி நிறுவனங்கள் இருக்கிறது. இதனால் கடந்த 7 ஆண்டுகளில் 414 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் 20 மாவட்ட ஆட்சியர் பயிற்சி நிறுவனங்களில் மீண்டும் மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மாணவர்கள் சேர்க்கை இல்லாத காரணத்தால் சுயநிதி ஆசிரியர் பட்டயப்பயிற்சி நிறுவனங்கள் 2015ஆம் ஆண்டில் 402 எனவும், மாணவர்களுக்கான இடம் 25,200
- Get link
- X
- Other Apps
ஆசிரியர்களுக்கு மலைப் பகுதிகளில் ஓராண்டு கட்டாய பணி: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் மலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஓராண்டு மலைப் பகுதியில் பணியாற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஈரோடு, தேனி, சேலம், வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் மலைகள் அதிகம் உள்ளன. இந்த மாவட்டங்களில் 20 கல்வி ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மலைக்கு கீழ் பகுதியில் உள்ள சமவெளியில் பணிபுரிய விரும்புகின்றனர். ஆனால், மலையின் மேல் பகுதிக்குச் சென்று பணிபுரிய விரும்புவதில்லை. இந்நிலையில், மலையின் மேல் பகுதியில் உள்ள மாணவர்களும் பயன்பெறும் வகையில் மலைப் பகுதி சுழற்சிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளில் திருத்தம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார். மலைப்பாங்கான இடங்களில் தொடக்கக் கல்வி இயக்கத்தின்கீழ் மலைப் பகுதிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆ
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வு - ஜி.கே. வாசன் எதிர்ப்பு!! ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்க 'நியமனத்தேர்வு' என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஏறக்குறைய 60 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இதுவரை பணி கிடைக்காமல் மிகுந்த சிரமத்தில் உள்ளனர் . ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஒன்பது ஆண்டுகள் பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு நியமனத் தேர்வு என்ற அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் . அதோடு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இவர்கள் , பணி வழங்ககோரி கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது . இந்த வழக்குகள் இவர்களை பல்வேறு நிலைகளில் பாதிப்பதாக அமைந்துள்ளது . ஆகவே தமிழக அரசு அந்த வழக்குகளை முழுமையாக ரத்து செய்ய வேண்
- Get link
- X
- Other Apps
கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு வரும் 27ஆம் தேதி தொடங்கி, ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2022-23ஆம் கல்வி ஆண்டில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் நேற்று (ஜூன் 16) வெளியிட்டார். வரும் 20ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு வரும் 27ஆம் தேதி தொடங்கி, ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை வேண்டும்: மேலும், உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், "12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்பட வேண்டும். மாணவர் சேர்க்கை பணிகளும், கட்டண விவகாரங்களும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். மாணவர் சேர்க்கையை நடத்துவதற்க
- Get link
- X
- Other Apps
அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில மோகம்... சென்னையில் 84 சதவீதம் ஆங்கில வழிக்கல்வி..? சென்னையில் ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவும், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாகவும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்து வருகிறது. ஆனால், மாணவர்கள் ஆங்கில வழிக்கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை தமிழ்வழிக்கல்வி கற்பதற்கு சென்னை போன்ற நகரங்களில் விரும்புவதில்லை. தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் கருதி பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்வியை அளிப்பதற்கே விரும்புகின்றனர். சென்னையில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி பெற்றோர் தங்களின் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கின்றனர். இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத
- Get link
- X
- Other Apps
எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு 5000 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்க முடிவு சென்னை : எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு பாடம் நடத்த, 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க, பள்ளிக் கல்வி துறை முடிவு செய்துள்ளது. அரசின் அங்கன்வாடிகளுடன் இணைந்து செயல்படும் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மழலையர் வகுப்புகளில் பாடம் நடத்துவதற்கு, தனியாக சிறப்பாசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 2,381 பள்ளிகளில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளை நடத்த, 5,000 ஆசிரியர்களை நியமிக்கப்பட உள்ளனர். முதற்கட்டமாக, 2,500 பேர் உடனடியாக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பள்ளிக் கல்வி துறை நடத்தும், தொடக்க கல்வி டிப்ளமா படித்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- Get link
- X
- Other Apps
திமுக ஆட்சியிலும் தொடரும் அவலம்: குழப்பங்களின் கூடாரமா பள்ளிக் கல்வித்துறை? ஆட்சி மாறியும் காட்சி மாறாத கதையாக பள்ளிக் கல்வித்துறையின் பல்வேறு செயல்பாடுகளால், குழப்பங்களின் கூடாரமாகத் துறை மாறிவிட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவியேற்றுக் கொண்டார். இதற்குப் பிறகு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடர் கதையாக இருந்த, பள்ளிக் கல்வித்துறையில் அறிவிப்புகள் வெளியாவதும் அவை திரும்பப் பெறப்பட்டு, புதிய அறிவிப்புகள் வெளியாவதும் நடக்காது என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியிலும் இந்த அவலம் தொடர்கிறது. நாளொரு அறிவிப்பும் பொழுதொரு பின்வாங்கலுமாய் இருக்கும் பள்ளிக் கல்வித்துறையால், ஆசிரியர்களும் மாணவர்களும் பாதிக்கப்படுவதாய்க் குரல்கள் எழுகின்றன. அந்த வகையில் அண்மையில் பள்ளிக் கல்வித்துறையில் வெளியான அறிவிப்புகளும் அவற்றைத் திரும்பப் பெறுதலும், புதிய அறிவிப்புகளை வெளியிடுதலும் என்னென்ன? பார்க்கலாம். கல்விக் கொள்கை சர்ச்சை பொறுப்பேற்ற பிறகு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்ச
- Get link
- X
- Other Apps
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் தேதியிலும் குழப்பம் விளைவித்த பள்ளிக்கல்வித்துறை ஜூன் 20ம் தேதி காலை 9.30 மணிக்கு 12ம் வகுப்பு தேர்வும், 12 மணியளவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதாவது இன்று வெளியாகவிருந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகம் ஜூன் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. 10ம் வகுப்புக்கு கடந்த மே மாதம் 6ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை நடந்து முடிந்தது. இத்தேர்வை சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணியானது கடந்த ஜூன் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தம் செய்து, மதிப்பெண்களை தொகுத்து அதனை தேர்வுத்துறை அலுவலர்கள் சரிபார்த்த பின்னர் தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றும் பணி நடந்து முடிந்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டப்படி ஜூன் 17ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி நாளை காலை