.jpg)
சென்னை அரசுப்பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் 16%, ஆங்கிலவழியில் பயிலும் மாணவர்கள் 84% - ஆர்.டி.ஐ, தகவல் தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் 61 விழுக்காடு என்றும், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் 35 விழுக்காடு என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளின் வாயிலாக தெரிய வந்துள்ளது. நாசர் முகமது முகைதீன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் மொத்தம் 29413 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 12,34,426 மாணவர்களும், 11,78,386 மாணவர்களும் படித்து வருகின்றனர். அதில் 14,73,153 மாணவர்கள் தமிழ் வழிக் கல்வியிலும், 8,45,348 மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியிலும் படித்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 26 அரசுப் பள்ளிகளில் மொத்தம் 26, 330 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அதில், 9,527 மாணவர்களும், 16,803 மாணவர்களும் அடக்கம். இதில், 1891 மாணவர்கள் தமிழ்வழி கல்வியிலும், 7636 மாணவர்கள் ஆங்கிலவழி கல...