தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் புழல் சிறையில் உதவி சிறை அதிகாரியாக பணிபுரிந்து வரும் ஷாலினி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தான் நீலகிரி மாவட்டம் கேரள எல்லையில் உள்ள சேரம்பாடி ஊரைச் சேர்ந்தவர் என்றும், அங்கு 10ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் படித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் 11 மற்றும் 12ம் வகுப்பு தன் ஊரில் இல்லாததால் அருகிலுள்ள கேரளாவில் உள்ள பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் படித்ததாக குறிப்பிட்டுள்ளார்.பின்னர் குரூப்-2 தேர்வு எழுதி, தமிழ் வழியில் படித்ததிற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில், சென்னை புழல் சிறையில் உதவி சிறைத் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு குரூப் -1 தேர்வு எழுதியதாகவும், அப்போது தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க, தமிழக அரசின் புதிய சட்டதிருத்ததத்தின் அடிப்படையில் அனைத்து வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை கேட்பதாகவும் குறிப்பிட்ட...
Posts
Showing posts from June 13, 2022
- Get link
- X
- Other Apps
டிஎன்பிஎஸ்சிக்கு தற்காலிக தலைவர் டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் ஓய்வு பெற்றதையடுத்து தற்காலிக பொறுப்பு தலைவராக சி.முனியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக இருந்த அருள்மொழி ஐ.ஏ.எஸ். கடந்த 2020ம் ஆண்டு ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய தலைவராக பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டார். தஞ்சாவூரைச் சேர்ந்த பாலச்சந்திரன், பழனி துணை ஆட்சியராக 1986ம் ஆண்டு தனது பணியினை தொடங்கினார். 1994ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தமிழ்நாடு பிரிவில் நியமனம் செய்யப்பட்டார். தர்மபுரி, கன்னியாகுமரி, ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவராக பணிபுரிந்துள்ளார். பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் வயது அடிப்படையில், கடந்த 9ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை, ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி உறுப்பினராக இருந்து வரும் சி.முனியநாதன் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞா...
- Get link
- X
- Other Apps
மக்கள் நல பணியாளர்கள் விண்ணப்பிக்க அழைப்பு கரூர்,---கரூர் மாவட்டத்தில், மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட உள்ளதால் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறையில் பணியாற்றிய மக்கள் நலப்பணியாளர்கள் கடந்த, 2011-ம் ஆண்டு நவ., 8ல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்ட முந்தைய மக்கள் நலப்பணியாளர்களை, தற்போது அரசு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில், வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளராக பணியில் ஈடுபட வாய்ப்பளித்துள்ளது. இப்பணிக்காக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட நிதியிலிருந்து, 5,000 ரூபாய், கூடுதலாக கிராம ஊராட்சி பணிகளுக்காக, 2,500 ரூபாய் என, மொத்தம், 7,500 ரூபாய் மாதம் ஒன்றுக்கு ஒட்டுமொத்த தொகுப்பூதியம் வழங்கப்படும். எனவே, முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் தாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த வட்டாரத்தின் வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடர்பு கொள்ளலாம்.மேலும், இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம், ஏற்கனவே பணியாற்றியதற்கான விபரத்துடன் பணியில் ஈடுபடவுள்ளதற்கான...
- Get link
- X
- Other Apps
அரசு பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்களுடன் அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், அன்பில் மகேஷ்; சமயலறை உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு சென்னை: அரசு பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து முதல்வர் ஸ்டாலின், அன்பில் மகேஷ் 10ம் வகுப்பு தமிழ் ஆசிரியை பாடம் நடத்தும் முறையை மேசையில் அமர்ந்து கவனித்தனர். திருவள்ளூர் வடகரை அரசு பள்ளியில் ஆய்வு செய்த முதல்வர் வகுப்பறையில் தமிழ்பாடத்தை கவனித்தார். தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு பள்ளிகளில் 1 முத்த 3 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் திட்டம் தொடர்பான கைபேசி செயலி, திட்டப்பாடல் ஆகியவற்றையும் முதல்வர் வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் கையேடு, சான்றிதழ், கற்றல் கற்பித்தல் உபகரணம், புத்தகங்கள் ஆகியவற்றையும் வழங்கினார். இத...
- Get link
- X
- Other Apps
8-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கைக்கு மாற்றுச்சான்று அவசியம் இல்லை.! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.! 8-ம் வகுப்பு வரை சேர வரும் மாணவர்களிடம் மாற்றுச்சான்று (TC) இல்லாவிட்டாலும் தடையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1, 2 மற்றும் 3 -ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2022 - 2023-ம் கல்வியாண்டில் இருந்து 'எண்ணும் எழுத்தும்' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கடந்த மாதம் 21-ம் தேதி முதல் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இனி வாரத்தில் ஒருநாள் நீதிபோதனை வகுப்புகள் நடைபெறும் என்ற அறிவிப்பானது, கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கைகள் அடிப்படையில் செயல்படுத்தப்படயிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை...