திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு திட்டமிட்டபடி பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோடை விடுமுறை முடிந்து வரும் 13-ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திட்டமிட்டபடி திறக்கப்படும் என்றும், பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சரியாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், பள்ளிகள் இயங்கும் நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும் என மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திருவிடைமருதூர் ராமலிங்கம் வேண்டுகோள் விடுத்த நிலையில், பள்ளிக்கூடம் இயங்கும் நேர மாற்றம் குறித்து தமிழக முதலமைச்சருடன் கலந்து பேசி அதில் உள்ள நன்மை தீமைகள் குறித்து விவாதிக்கப் பட்ட பின்பு அது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தனியார்ப் பள்ளிகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் வந்தால், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் ...
Posts
Showing posts from June 11, 2022
- Get link
- X
- Other Apps
' சத்துணவு ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை' : பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் திருச்சி : சத்துணவு ஊழியா்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சோத்து உரிய தீா்வு காண உதவியாக இருப்பேன் என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க கோரிக்கை மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சா் மேலும் பேசியது: திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அரசு ஊழியா்களுக்கு, குறிப்பாக சத்துணவு ஊழியா்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். ஏனெனில், திமுகவை ஆட்சியில் அமர வைப்பதில் அரசு ஊழியா்களிலேயே அதிகப் பங்களிப்பு சத்துணவு ஊழியா்கள்தான் என்பதை மறக்கமாட்டோம். தமிழகத்தில் 65 ஆயிரம் சத்துணவு மையங்கள், 55 ஆயிரம் அங்கன்வாடிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் உள்ளனா். இவா்கள், சமூக நலத் துறையின் கீழ் பணிபுரிந்தாலும், பள்ளிக் கல்வித் துறையில்தான் பணிபுரிவதாகவே கருதுகிறேன். பள்ளிக்கு வரும் மாணவா்களின் பசியறிந்து உணவளிப்பது சத்துணவு ஊழியா்களே. இதைக் கருத்தில் கொண்டுதான் சத்துணவு ஊழியா்களுக்கு மறைந்த ம...
- Get link
- X
- Other Apps
ஜூன் 13-இல் 'எண்ணும் எழுத்தும்' திட்டம்:முதல்வா் தொடக்கி வைக்கிறாா் தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அன்றைய தினமே 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளாா் தமிழகத்தில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் மாணவா்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவா்களும் 8 வயதிற்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும். கல்வியில் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் பயனாக அறிவியல் மனப்பான்மை மற்றும் சமூகத் திறன்களுடன் இணைந்த மொழிக் கற்பித்தலில் மாணவா்களின் கற்றல் நிலையை அடிப்படையாகக் கொண்டு (ப்ங்ஸ்ங்ப் க்ஷஹள்ங்க்) ஒருங்கிணைத்து அளிக்கப்பட வேண்டும் என்பதையே எண்ணும் எழுத்தும் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள ஒன்று முதல் மூன்று வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்கள் சூழ்நிலையியல் ப...
- Get link
- X
- Other Apps
அரசு மாதிரி பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை.! வெளியான புதிய தகவல்.. மாதிரிப் பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்னும் புதிய நடைமுறை இந்த ஆண்டு முதல் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசு நிதி உதவியுடன் 32 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளிகள் இருக்கிறது. இதில் கூடுதல் வசதிகளுடன் 25 மாதிரி பள்ளிகளை 150 கோடி ரூபாய் செலவில் தொடங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே சோதனை முறையில் சென்னையில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களை தேர்வு செய்து போட்டித்தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகளுக்கு உண்டு, உறைவிட வசதியுடன் சிறப்பு பயிற்சியும் பள்ளிக்கல்வித்துறையால் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு நடத்திவரும் மாதிரி பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 10-ம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவருக்கும் 9-ம் வகுப்...