அரசு கல்லூரிகளில் 2423 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்! மாதம் 20 ஆயிரம் தொகுப்பூதியம்! அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் நடப்புக் கல்வி ஆண்டிற்கு 2423 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் 100- க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் கற்பித்தல் பணி பாதிக்கப்படாமல் இருக்க, அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பு 2022 - 2023 ஆம் கல்வி ஆண்டிற்கு அரசு கலைக்கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு 2,423 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள உயர்கல்வித்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு நியமிக்கப்படும் கவுரவ விரிவுரையாளர்கள், நிரந்தர பேராசிரியர்கள் நியமிக்கப்படும் வரை அ...
Posts
Showing posts from June 10, 2022
- Get link
- X
- Other Apps
TNPSC முக்கிய அறிவிப்பு! தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு! தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஜூன் 19-ம் தேதி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான கணினி வழித் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெடை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in இல் வெளியிட்டுள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டை மேலே குறிப்பிட்டுள்ள இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
- Get link
- X
- Other Apps
50 வயது வரை தகுதி... வழிகாட்டுதல் வெளியீடு!! மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது . மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரும் ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியமர்த்தப்படுவர் என்றும் , மதிப்பூதியம் ரூ .7,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார் . இந்நிலையில் இதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது . இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அமுதா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் . அந்தக் கடித்தில் மக்கள் நல பணியாளர்ளுக்கு ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளராக பணி வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார் . சம்பந்தபட்டவர் அந்த கிராம ஊராட்சியில் வசிக்க வேண்டும் . குறைந்தபட்சம் 10 ம் வகுப்பு படித்து இருக்க வேண்டும். அதிகபட்சம் 50 வயது வரை இருக்கலாம். கணினி குறித்த அடிப்படை அறிவு முன்னுரிமை தகுதி. ஊரக வாழ்வாதார இயக்கம், வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவற்றில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். விதவைகள், கை...
- Get link
- X
- Other Apps
அரசுப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் திறப்பு எப்போது.? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு.!!!! நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. அங்கன்வாடிகளில் நடைபெறும் மேம்படுத்தப்படும் என்றும் எல்கேஜி, யுகேஜி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இதனையடுத்து பல்வேறு கண்டனங்களுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி,யூகேஜி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் LKG, UKG வகுப்புகளை எப்போது தொடங்குவது, சிறப்பாசிரியர்கள் நியமனம், காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்துகிறார். அதிகாரிகளுடன் நடைபெறும் ஆலோசனையில் ஆசிரியர் நியமனம் குறித்தும் அமைச்சர் விவாதிக்கிறார்.