ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க அரசு முடிவு! - விரைவில் அரசாணை! இதன் மூலம் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க அரசு முடிவு என தகவல். அரசுப் பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2013-ஆம் ஆண்டுக்கு முன் TRB மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். இந்த ஆண்டு ட...
Posts
Showing posts from June 7, 2022
- Get link
- X
- Other Apps
60 ஆயிரம் கம்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி இளைஞர்கள் வேலையின்றி தவிப்பு.. பணிக்கான வழி ஏற்படுமா? தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆரம்பம் முதலே கணினி பாடம் கற்பிக்கப்படுகிறது. இந்த வசதி அரசு பள்ளிகளில் கிடைத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என்ற நோக்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கணினி அறிவியல் பாடம் கற்க வேண்டும். தமிழக அரசு பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு கணினி பாடத்தை கொண்டுவந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. மேலும் இந்தப் பாடத்திட்டம் கடந்த 2009- ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடம் இடம் பெறும் வகையில் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இலவச கணினி அறிவியல் கல்வி அளிக்கும் வகையில் சமச்சீர் கல்வி திட்டம் கடந்த 2011 மற்றும் 2012- ஆம் ஆண்டு வகுப்புகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைக்கு வராமல் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாட புத்தகங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்த...
- Get link
- X
- Other Apps
டிஎன்பிஎஸ்சி தமிழ் வழி இடஒதுக்கீட்டில் முறைகேடு!? டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் முறைகேடு நடப்பதாக ஆரணியில் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் . தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 21 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு நடைபெற்றது . திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதியில் 2664 பட்டதாரிகள் 9 மையங்களில் இத்தேர்வினை எழுதினர் . 2010 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி , அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஓதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார் . மேலும் கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் வழியில் தேர்வு எழுதும் போட்டி தேர்வாளர்களூக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது . அந்த வகையில் அண்மையில் நடந்த தேர்வில், தமிழ் வழி இட ஒதுக்கீட்டுக்கு தகுதி பெற்றவர் என டிஎன்பிஎஸ்சியால் குறிப்பிடப்பட்ட சுமார் 75 ஆயிரம் நபர்கள் தேர்வு எழுதியுள்ளனர் . இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தமிழ்மொழி இட ஒதுக்கீட்டை கோரியுள்ள பட்டத்தாரிகள் கூறுகையில் , ஒரு தேர்வ...