Posts

Showing posts from June 6, 2022
Image
 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்.. பள்ளிக் கல்வித்துறை தகவல்.. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான கடந்த மே மாதம் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால், இறுதித்தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளமால ஒன்று முதல் ஒன்பது வரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கல்வியாண்டில் நடைபெற்ற அனைத்து தேர்வுகளையும் மாணவர்கள் எழுதினாலே போதுமானதும் என்றும் இறுதித் தேர்வு எழுதாத மாணவர்களை அழைத்து தனித்தேர்வு நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி எனும் முறை ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நிலையில் தற்போது 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் ஆல் பாஸ் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு போட்டுள்ளது.
Image
  டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. உடனே இத பண்ணுங்க.. அசத்தலான அறிவிப்பு..!!!! தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயிற்சி பெறுகின்றனர். அவ்வாறு பயிற்சி வகுப்புகளுக்கு செலவழிக்க முடியாத சிலர் நூலகம் மூலமாக புத்தகங்கள் பெற்று தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அதேசமயம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக திரும பயிலகம் என்ற இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் இயங்கிவருகின்ற திருமா பயிலகம் மூலமாக அரசு வேலைவாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகள் கட்டணமின்றி பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் பலரும் பயனடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வ...
  164 உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்த அரசு திட்டம்   நடப்பு கல்வியாண்டில், 164 அரசு உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த, பள்ளிக்கல்வி துறை தீர்மானித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ், தமிழக பள்ளிக்கல்வி துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.  இதன்படி, ஒருங்கிணைந்த கல்வி திட்டமான, 'சமக்ர சிக் ஷா' திட்டம் வழியே, மத்திய அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டு, பள்ளிகளின் உள் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன.  இந்த வகையில், வரும் கல்வியாண்டில், 164 உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த, சமக்ர சிக் ஷா திட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், சமக்ர சிக் ஷாவின் மாநில திட்ட இயக்குனர், சுதன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தரம் உயர்த்தப்பட உள்ள, 164 அரசு உயர்நிலை பள்ளிகளின் விபரங்கள், மாவட்ட வாரியாக இடம் பெற்றுள்ளன.  இந்த பள்ளிகள் அனைத்தையும், மேல்நிலை பள்ளிகளாக மாற்றுவதற்குரிய கருத்துருவை இணைத்து அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இதன் காரணம...
Image
  TNPSC Group 4 VAO தேர்வு; இப்படி படிங்க. 180+ கொஸ்டின் உறுதி TNPSC group 4 VAO exam How to answer 180 questions: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வி.ஏ.ஓ தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 180 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க எப்படி படிக்கலாம் என்பதற்கு டிப்ஸ் இங்கே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. மேலும் இந்த தேர்வை எழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே போதும். இதனால், குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். எனவே, போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும். அடுத்தப்படி...