
இல்லம் தேடி கல்வி திட்ட ஊழியர்களுக்கு 4 மாத சம்பளம் பாக்கி..! தமிழக அரசை போட்டு தாக்கும் ராமதாஸ்.. இல்லம் தேடி கல்வி- சம்பளம் பாக்கி கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவரின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு தமிழக முதல்வர் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார். பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க தன்னார்வலர்கள் மூலம் நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், இத்திட்டத்தின்கீழ், மாணவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக தன்னார்வலர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு மாதம் ரூ.1000 சம்பளம் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு முனைவர் பட்டம் முடித்த 450 பேர் உட்பட மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து பணியாற்றி வந்தவனர். இவர்களுக்கு உரிய முறையில் ஊதியம் வழங்க வில்லையென்று புகார் எழுந்தது. தன்னார்வலர்கள் பாதிப்பு இந்தநிலையில் இந்த புகார் தொடர்...