Posts

Showing posts from June 4, 2022
Image
  TET - ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எப்போது நடைபெறும்? ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக 2020, 2021-ம் ஆண்டுகளில் டெட் தேர்வு நடத்தப்படவில்லை. கரோனா பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு டெட் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, தேர்வுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 6.33 லட்சம் பேர் விண்ணப்பம் இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்-1, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 இரண்டையும் சேர்த்து டெட் தேர்வுக்கு 6 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான அறிவிக்கையில் தேர்வு எப்போது...
Image
  10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறுத்தேர்வு.. தமிழக அரசு புதிய அதிரடி..!!!! தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்பட்டு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். நடந்து முடிந்த பொதுத் தேர்வில் 10,11,12 ஆம் வகுப்புகளில் 7,49,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. சரியாக 4.6 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை. 10,11,12 ஆம் வகுப்புகளில் தேர்வு எழுத மொத்தமாக பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 27,30,000. ஆனால் இதில் 6,49,467 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இந்நிலையில் பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித்துறை அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுத் தேர்வு எழுதாத அனைத்து மாணவர்களுக்கும் மறு வாய்ப்பு வழங்கும் விதமாக ஜூலை மாதம் துணை தேர்வு நடத்த அரசு தேர்வுகள் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இது ...
Image
  அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கு அதிகாலை முதல் வரிசையில் நின்ற பெற்றோர்கள்! தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பல மணி நேரம் காத்திருந்து தங்களுடைய பிள்ளைகளுக்கு எல்.கே.ஜி வகுப்பிற்கான சேர்க்கை விண்ணப்ப படிவங்களை பெற இரவு பகலாக காத்திருந்த நிலை தற்போது மாறி அரசுப் பள்ளிகளிலும் இப்படி காத்திருந்து விண்ணப்பங்களை பெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு சான்றாக திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்களுடைய பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க அதற்கான விண்ணப்பப் படிவங்களை பெறுவதற்காக பெற்றோர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இது அரசுப் பள்ளியின் தரம் எந்த அளவிற்கு உயர்ந்து உள்ளது என்பதை அடையாளப்படுத்தும் விதமாக மாறியுள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும், இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில் பள்ளியில் நல்ல ஒழுக்கங்களும், நல்ல கல்வியும், பயிற்சியும் மாணவர்களின் வளர்ச்சியில் அதிக அளவு கண்டிப்பும் கண்காணிப்பும் இருப்பதால் இந்த அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தாங்கள் ஆர்வம் காட்டுவதாக கூறுகின்றனர்.
Image
  ஆசிரியர்கள் பற்றாக்குறை; கல்வி அமைச்சர் விளக்கம் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களை தேர்வு எழுத வைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் நியூஸ் 7 தமிழ் அன்புபாலம் மற்றும் தகரி சிலம்பாட்ட கழகம் சார்பில் மாநில அளவில் நடைபெறும் சிலம்பம் போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், விளையாட்டு துறையில் சிலம்பம் போட்டிக்கு 3% இடஒதுக்கீட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார் என தெரிவித்தார். பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சியை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார் என தெரிவித்த அவர், சிலம்பத்தின் வரலாற்றை அறிய தனி குழுவை முதலமைச்சர் அமைத்துள்ளார் என குறிப்பிட்டார். மேலும், 4 இடங்களில் ஒலிம்பிக் கமிட்டி, சென்னைக்கு அருகில் விளையாட்டு நகரம், செஸ் ஒலிம்பியாட் போட்டி என விளையாட்டை மேம்படுத்த பல திட்டங்களை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார் ...
Image
  அடுத்த கல்வியாண்டு முதல் புதுச்சேரி பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்: கல்வித்துறை முடிவு அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகப் பாடத்திட்டத்துக்கு பதிலாக புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் 6-ம் வகுப்பு முதல் தொடங்க வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. 2011-ல் என்ஆர்காங், அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. 2014-15-ம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்இ., பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக சிபிஎஸ்இ, பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வந்தது. இவ்வாறு கடந்த 2018-19 கல்வி ஆண்டில் 5-ம் வகுப்பிற்கும் சிபிஎஸ்இ, பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. 6-ம் வகுப்பில் இருந்து சிபிஎஸ்இ, பாடத் திட்டம் விரிவாக்கப்படவில்லை. இதனால், 5-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ, பாடத்திட்டத்தில் படித்...
Image
  மாநில கல்வி உருவாக்கம் : வழிகாட்டும் அரசாணை வெளியீடு ஜூன் 3 சமத்துவக் கல்வி, தேர்வு முறை சீர்திருத்தம் போன்றவற்றை உள்ளடக்கிய மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கான வழிகாட் டுதல் அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. ஓராண்டுக்குள் கல்விக் கொள் கையை உருவாக்கி அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையை கடந்த 2020ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதற்கு மாற்றாக மாநிலத்துக்கென தனிச் சிறப்பு கல்விக் கொள்கை வடிவமைக்கப்படும் என்று தமிழ் நாடு அரசு அறிவித்திருந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அதன்படி, மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலை மையில் 13 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இதன் உறுப்பினர்களாக சவீதா பல் கலைக்கழக மேனாள் துணைவேந் தர் எல்.ஜவகர் நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ராமானு ஜம், மாநில திட்டக் குழு உறுப் பினர்கள் சுல்தான் இஸ்மாயில், ராம சீனுவாசன், யுனிசெப் மேனாள...
Image
  தமிழகத்தில் 22 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை! அதிர்ச்சி ரிப்போர்ட் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் உள்ள 22 பள்ளிகளில் ஒரு மாணவரும் இல்லையெனவும், 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் பயின்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் 2022-23 ம் கல்வியாண்டில் வரும் 13ம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளை திறக்கும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தொடக்கக் கல்வி இயக்குனர் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அரசுப் பள்ளிகளில் மாணவர்களை அதிகளவில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளி மேலாண்மைக் குழுவின் உதவியுடன் 14ம் தேதி மாணவர்கள் சேர்க்கை பேரணியை நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டன. ஒரு மாணவரும் இல்லாத 22 பள்ளியில் 10 மாணவர்களை சேர்த்தால் 2 ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ள 669 பள்ளிகளிலும் இரட்டை இலக்கத்தில் மாணவர்களை சேர்க்க வேண்டும் எனவும் தொடக்கக் கல்விததுறையில் உத்தரவிட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில்...
Image
 7 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.  CEO அந்தஸ்தில் உள்ள 7 கல்வி அலுவலர்கள் இடமாற்றம் DEO அந்தஸ்தில் உள்ள 4 பேருக்கு, CEO ஆக பதவி உயர்வு. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. * மதுரை, நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட CEO - க்கள் மாற்றம் * தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநர் வெற்றிச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்ட CEO - ஆக நியமனம். * புதுக்கோட்டை CEO சத்தியமூர்த்தி , தஞ்சை மகாராஜா சரபோஜி சாஸ்வதி மகால் நூலக நிர்வாக அலுவலராக மாற்றம். * திருவள்ளூர் CEO ஆறுமுகம், பாடநூல் கழக துணை இயக்குநராக மாற்றம். * நாமக்கல் , உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு DEO - க்கள் முறையே திருவள்ளூர், மதுரை, நீலகிரி CEO - ஆக நியமனம்.
  கலை, அறிவியல் கல்லுாரி சேர்க்கை'ஆன்லைன்' முன்பதிவு துவக்கம் சென்னை:பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வரவுள்ள நிலையில், கலை, அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை பாடத்திட்டங்களிலும், பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மாதம் முடிந்தன. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் தேர்வுத் துறை ஈடுபட்டுள்ளது. இந்த மாத இறுதியில் பெரும்பாலான பாடத்திட்ட மாணவர்களுக்கு, தேர்வு முடிவுகள் வரவுள்ளன. இந்நிலையில், பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேரும் வண்ணம், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான பணிகள் துவங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் சிலவற்றில், விண்ணப்ப வினியோகம் துவங்கியுள்ளன. பெரும்பாலான கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகள் தரப்பில், பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகும் நாளையொட்டி, விண்ணப்பங்களை வழங்க முடிவு செய்துள்ளன. அதே நேரம், மாணவர்களின் சுய விபரங்களை ஆன்லைன் மற்றும் நேரடி முறையில், பதிவு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. அரசு கலை, அறிவ...
Image
  அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல் தமிழ்நாட்டில் 22 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்பதால் வருகிற 14ம் தேதி மாணவர் சேர்க்கை பேரணியை நடத்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. வருகிற 13-ம் தேதி 1முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கான முன் ஏற்பாடுகள், மாணவர் சேர்க்கை குறித்து 20 ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், தொடக்கக்கல்வித்துறையின் கீழ் உள்ள 22 பள்ளிகளில் 1 மாணவர் கூட இல்லை என்றும், 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் படித்து வருவதாகவும் குறிப்பிட்டனர். இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் உதவியுடன் வரும் 14-ம் தேதி மாணவர் சேர்க்கை பேரணியை ஆசிரியர்கள் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்த்தால், அதற்கேற்ப ஆசிரியர...