புதுச்சேரியில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் புதுவை அரசின் தொழிலாளா் துறை சாா்பில், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து தொழிலாளா் துறை, வேலைவாய்ப்பு அலுவலக செயலா் சுந்தரேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் முன்னணி நிறுவனங்கள் உள்பட 365 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களைத் தோவு செய்ய உள்ளனா். பொறியியல், கலை-அறிவியல் பட்டப் படிப்பு படித்தவா்கள், ஓட்டுநா்கள் பங்கேற்கலாம். தகுதியுடையவா்கல் சுயவிவரக் குறிப்பு, கல்வித் தகுதிக்கான உண்மை, நகல் சான்றிதழ்களுடன் முகாமில் பங்கேற்கலாம்.
Posts
Showing posts from June 2, 2022
- Get link
- X
- Other Apps
பொதுத்தேர்வை தவறவிட்ட 1.2 லட்ச மாணவர்களுக்கு உடனடி துணை தேர்வு... தமிழ்நாடு அரசு ஏற்பாடு! தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1.2 லட்சம் மாணவர்கள் பங்கேற்காத நிலையில் அவர்களை உடனடியாக இந்த ஆண்டு நடைபெற உள்ள துணைத் தேர்வில் பங்கேற்க வைக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார்கள். அதில் `பொதுத்தேர்வு 2022-ல் பங்கேற்காத மாணவ/மாணவியர் எண்ணிக்கை குறித்த மீளாய்வு இன்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 10th, 11th, 12th பொதுத்தேர்வு எழுதாத மாணவ/மாணவியரை 'உடனடித் தேர்வில்' கலந்து கொள்ளச் செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. இதற்கான 'செயல்திட்டத்தை' தயார் செய்திடும்படி அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' என்று கூறப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில் 10, 11 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான ...
- Get link
- X
- Other Apps
தபால் துறையில் 38,926 காலியிடங்கள்; தேர்வு இல்லாமல் வேலை: இன்னும் சில நாள் மட்டுமே அவகாசம் India post recruitment 2022 for 38926 GDS posts how to apply details: போஸ்ட் ஆபிஸ் ஜி.டி.எஸ் பணிக்கு விண்ணபிக்க இன்னும் 5 நாட்களே அவகாசம் உள்ள நிலையில், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இந்த வேலைக்கான தகுதிகள், விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். போஸ்ட் ஆபிஸில் வேலை பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற கிராம தபால் ஊழியர் (BPM) மற்றும் உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். இதற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பச் செயல்முறை குறித்து கீழே பார்ப்போம். தபால் சேவை மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 38,926 தமிழ்நாட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை - 4,310 கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச...
- Get link
- X
- Other Apps
அரசுப் பணியாளா் தேர்வாணைய புதிய தலைவா் யாா்? அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் தலைவராக உள்ள க.பாலச்சந்திரன், ஒரு வாரத்தில் (ஜூன் 9) ஓய்வு பெறவுள்ளாா். தேர்வாணையத்தின் புதிய தலைவா் யாா் என்பது அதிகாரிகள் அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையமானது, தலைவா் மற்றும் 6 உறுப்பினா்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தேர்வாணையத்தின் 26-ஆவது தலைவராக 2020-ஆம் ஆண்டு ஏப்.13-இல் க.பாலச்சந்திரன் பொறுப்பேற்றாா். தலைவராக நியமிக்கப்படுபவா், 62 வயது வரை அல்லது ஆறு ஆண்டுகள் வரை என இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை தலைவராகப் பதவி வகிக்கலாம். இந்த நிலையில், 62 வயதை நிறைவு செய்யவிருப்பதால், அரசுப் பணியாளா் தேர்வாணையத் தலைவா் பதவியிலிருந்து வரும் ஜூன் 9-ஆம் தேதி க.பாலச்சந்திரன் ஓய்வு பெறவுள்ளாா். கடந்த இரு ஆண்டுகளாக அவா் இந்தப் பதவியில் இருந்தாா். கரோனா காலத்துக்கு இடையே அவா் பொறுப்பேற்றாா். நோய்த் தொற்று குறைந்த இந்த காலகட்டத்தில் குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. முக்...