Posts

Showing posts from June 1, 2022
Image
  முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.. தெரிந்துக்கொள்வது எப்படி..? முழு விவரம்.. முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டது என்றும் நீட் தேர்வில் தகுதிப்பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவ மேல் படிப்பிற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 21 ஆம் தேதி 267 நகரங்களில் 849 மையங்களில் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 301 பேர் எழுதினர். இந்நிலையில் தற்போது முதுகலை நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில்," முதுகலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. தேர்வில் தேர்ச்சியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள். 10 நாட்களிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட்ட தேசிய தேர்வு முகமைக்கு எனது பாராட்டுகள்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மாணவர்கள் தங்களது முடிவுகளை தெரிந்துக்கொள்ளுவதற்கான இணையதள தொடர்பினை பதிவிட்டுள்ளார்.
Image
  தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டை புறக்கணிக்கப் போகிறோம்"- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் இன்றும் நாளையும் குஜராத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நாடு முழுவதும் நடைபெற உள்ளகல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாட்டை, தமிழ்நாடு புறக்கணித்துள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை அமைச்சர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இருவருமே கலந்துகொள்ளவில்லை. இம்மாநாட்டில் தேசிய கல்வி கொள்கை குறித்தும், தேசிய அளவில் பாடத்திட்ட மாற்றம் குறித்தும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு எதிர்த்து வரும் நிலையில் குஜராத்தில் நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு புறக்கணித்திருப்பது, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய தலைமுறைக்கு அளித்த தகவலில், 'இன்று மற்றும் நாளை குஜராத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டிற்கு அழைப்பு வந்தது. ஆனால் தமிழக அரசு சார்பில் பங்கேற்க வேண்டாம் என ...
Image
  மக்கள் நலப்பணியாளர் விவகாரம் தமிழக அரசு ஒப்புதலோடு வந்தால் மட்டுமே விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு தமிழக அரசின் ஒப்புதலோடு வந்தால் மட்டுமே மக்கள் நலப்பணியாளர் தொடர்பான வழக்கு கோடைக்கால அமர்வில் விசாரிக்கப்படும்,' என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'தமிழகத்தில் சுமார் 12,524 கிராம பஞ்சாயத்துகளில் மக்கள் நலபணியாளர்கள் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.7500 ஊதியம் வரும் வகையில் வேலை உறுதித் திட்டப் பணி கண்டிப்பாக வழங்கப்படும். இதில் முக்கியமாக பணி நீக்கம் செய்யப்பட்ட அல்லது கடந்த பத்து ஆண்டுகளில் இறந்துபோன மக்கள் நலப்பணியாளர்களின் சட்டப்படியான வாரிசுகளுக்கும் மீண்டும் பணி வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மக்கள் நலப்பணியாளர் விழுப்புரம் தன்ராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரகுநாத சேதுபதி...