தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 25000 அரசு ஊழியர்கள் ஓய்வு. இதில் 2000 ஆசிரியர்கள் மீதம் 23000 பேர் அரசு ஊழியர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 25,000 பேர் ஓய்வு பெறுகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 60 வயது பூர்த்தியான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வு வழங்கப்படும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று 60 வயது பூர்த்தியான 25,000 பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில் ஆசிரியர்கள் 2000 பேர்கள் என்றும் அரசு ஊழியர்கள் 23 ஆயிரம் பேர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்த நிலையில் 2020மே மாதம் 59 வயது என்றும், அதன்பின் கடந்த ஆண்டு 60 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஓய்வு பெறுபவர்கள் வயது உயர்த்தப்பட்டதால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த போதிலும் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக ஓய்வுபெறும் வயது உயர்த்தப் பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 60 வயது பூர்த்தியான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 25,000 பேர் இன்று
Posts
Showing posts from May 31, 2022
- Get link
- X
- Other Apps
ஆசிரியர்களும் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள்! வே.வசந்தி தேவி எழுதிய 'இளைஞர்களுக்கு துரோகம் செய்துவிட்டோம்' என்ற கட்டுரையின் (30.05.22) பேசுபொருள் முக்கியமானது. ஆனால், அணுகுமுறையில் முரண் தென்படுகின்றது 1. இந்தக் கட்டுரையில் ஆசிரியர்கள்தான் குற்றவாளிகள் என்ற தொனி மேலெழுகிறது. கிட்டத்தட்ட எல்லா ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களிடம் இந்த கரோனா காலகட்டத்தில் பேசினார்கள்; தொடர்பில் இருந்தார்கள்; எப்படி இருக்கிறார்கள் என விசாரிக்கவும் செய்தார்கள். விகிதாச்சாரத்தில் மாறுபாடு இருக்கலாம். எல்லா மாணவர்களிடமும் ஆசிரியரின் கைபேசி எண் இருந்தது (வாட்ஸ்அப் குழுவில்தானே செய்தி கொடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது). ஆனால், இது ஒரு சமூகக் கடமை. ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து மாணவர்களைக் கைப்பிடித்துத் தூக்க வேண்டும், துயரிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். ஆசிரியர்கள் அவர்களின் தொடர்பில் இருக்கும் மிகப் பெரிய ஆயுதம். 2. கரோனா காலகட்டத்துக்குப் பின்னர், பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் குழந்தைகளுடன் உரையாடுவதற்கு ஆசிரியர்களுக்கு அவகாசம் இருந்ததா? அவகாசம் கொடுக்கப்பட்டதா? அவர்கள்
- Get link
- X
- Other Apps
9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து - பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு! வரும் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் நிதியில் கற்றுத்தரப்படும் பேசன் டெக்னாலஜி,டெய்லரிங் டிசைனிங் உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. எனினும்,நடப்பு கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு முடித்து 10 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும் எனவும்,வரும் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 5 பாடங்கள் மட்டுமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
குரூப்-4 தேர்வுக்கு தயாராக.. இலவச பாடநூல் வேண்டுமா.? இதோ சூப்பர் அறிவிப்பு.!!!! தமிழக அரசு துறைகளில் காலியாகவுள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள். கொரோனா காரணமாக சென்ற 2 வருடங்களாக தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து தற்போது சென்ற 2 வருடங்களுக்கு பின் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 4 மற்றும் VAO தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. மேலும் குரூப்-4 தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிகொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்தால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4, வீஏஓ தேர்வுக்கு இலவச பாடநூல் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும் என அகாதெமி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அகாதெமியின் இயக்குனர் ச.வீரபாபு வெளியிட்ட செய்தியில், டிஎன்பிஎஸ்சி சார்பில் 7,382 காலி பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் அனைவரும் இலவச பாட நூல்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த
- Get link
- X
- Other Apps
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 25,000 பேர் இன்று பணி ஓய்வு முந்தைய ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60-வது மாற்றப்பட்ட நிலையில் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர். ஏற்கனவே மாநில அரசில் 1.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் மேலும் 25,000 இடங்கள் உருவாகியுள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 25,000 பேர் இன்று பணி ஓய்வு பெறுகின்றனர்.
- Get link
- X
- Other Apps
TNPSC Group 4: குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வுக்கு பாடம் வாரியாக தயாராவது எப்படி? TNPSC group 4 VAO exam How to prepare topic wise in Tamil here: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், சிலபஸ் குறித்தும், சிலபஸூக்கு ஏற்றவாறு எவ்வாறு படிப்பது என்பது குறித்தும் இப்போது பார்ப்போம். தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதனிடையே குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி என்பதால் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு முறை குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தம