Posts

Showing posts from May 30, 2022
Image
TN TET தேர்வு: ஜூலை இறுதிக்குள் நடத்த பிளான். வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!!! தமிழகத்தில் அரசுபள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தகுதி தேர்வு வாயிலாக நியமனம் செய்யப்படுகிறது இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படுகிறது. இவற்றில் முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 -5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கற்பிக்க தகுதியுடையவர்கள் எனவும் 2ஆம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 -8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க தகுதியுடைவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது 2 வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2019 ஆம் வருடம் இந்த தேர்வு நடத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ளதை அடுத்து அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடந்து வருகிறது. அதன்பின் இந்த வருடத்துக்கான தேர்வு தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு மார்ச் 14 முதல் ஏப்ரல்...
Image
  12ம் வகுப்பு வேதியியல் பொதுதேர்வு - 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் - அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு +2 வகுப்பு பொதுதேர்வில் வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. பகுதி 1-ல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5-ஐ எழுதிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் பகுதி 2-ல் கேள்வி எண் 29-ஐ எழுதிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது .
Image
  புதுவையில் ஜூன் 23-ல் பள்ளிகள் திறப்பு: சனிக்கிழமைகளில் விடுமுறை புதுச்சேரியில் ஜூன் 23ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் திங்கள்கிழமை அறிவித்துள்ளார். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் ஜூன் 23ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.