
குரூப் 2, 2ஏ தேர்வு - விடைகள் வெளியீடு!! குரூப் 2, 2A எழுத்துத் தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியாகியுள்ளது. குரூப் 2, 2A பதவிகளுக்கான எழுத்துத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த வாரம் நடத்தியது . 11 ,78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் தேர்வை எழுதினர் . பொதுவாக , தேர்வு நடைபெற்ற நாளிலிருந்து 6 நாட்களுக்குள் தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியிடப்படும் . அதன்படி , தேர்வாணைய இணையதளத்தில் குரூப் 2 தேர்விற்கான உத்தேச விடைகள் (Answer Keys) வெளியாகி உள்ளது. www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உத்தேச விடைகளில் ஏதேனும் தவறு உள்ளது என்று கருதினால், விண்ணப்பதாரர் மேல்முறையீடு செய்யலாம். விடைகள் வெளியிடப்பட்ட 7 நாட்களுக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள 'Answer Key Challenge' என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடு செய்யலாம். பெறப்பட்ட வேண்டுகோள்கள் அனைத்தும் ஒவ்வொரு பாடத்திற்கான வல்லுநர்கள் கொண்ட குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். வல்லுநர் குழுவின் பரிந்துரையில் அடிப்படையில், இறுதியான விடைகள் முடிவுசெய்யப்பட்டு, அதன் பின்...