Posts

Showing posts from May 25, 2022
Image
  TN MRB 4,308 காலிப்பணியிடங்கள் பற்றி.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!! தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து வகையான போட்டித் தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்தது. இதனால் அரசு துறைகளில் தேவையான அளவு பணியாட்கள் இல்லாத சூழ்நிலை இருக்கிறது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து அரசு அலுவலகங்களிலுள்ள காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது சென்னையில் மருத்துவர்களின் பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இதில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது, இந்த ஆட்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணி மாறுதலுக்கான கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இதில் 1008 மருத்துவர்களுக்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து 1000 மருத்துவர், செவிலியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரும் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது என தெரிவ...
Image
  காலை உணவு, சனிக்கிழமை விடுமுறை; கல்விக்கொள்கை: அமைச்சர் அறிவிப்புகளில் 10 முக்கிய அம்சங்கள்! பள்ளிகள் திறப்பு, பொதுத்தேர்வுத் தேதிகள் அறிவிப்பு, பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு, மாநிலக் கல்விக்கொள்கை, சனிக்கிழமைகளில் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இணையவழி சேவைகள் தொடக்கம், கல்வியாண்டு நாட்காட்டி மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு, திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அதன் முக்கிய அம்சங்கள்: 1. 1-10 வகுப்புகளுக்கு ஜூன் 13ஆம் தேதியும், பதினொன்றாம் வகுப்பிற்கு ஜூன் 27ஆம் தேதியும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும். 2. மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. அதேபோல மார்ச் 14ஆம் தேதி 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஆரம்பிக்கின்றன. அதேபோல ஏப்ரல் 3ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உ...
Image
  அடுத்த கல்வியாண்டில் எப்போது எந்த தேர்வு! - வெளியானது விரிவான பட்டியல்! தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிந்து பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டில் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நேரடி பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு நேரடி பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன். இந்நிலையில் பொதுத்தேர்வுகள் முடிந்து அடுத்த கல்வியாண்டிற்காக பள்ளிகள் திறக்கும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தற்போது அடுத்த கல்வியாண்டில் தேர்வுகள் நடைபெறும் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி காலாண்டு தேர்வு 1 முதல் 10 வகுப்புகளுக்கு செப்டம்பர் 26ம் தேதியும், 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23ம் தேதியும் தொடங்குகிறது. இந்த தேர்வுகள் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடையும். அரையாண்டு தேர்வுகள் 11,12ம் வகுப்ப்களுக்கு டிசம்பர் 16ம் தேதியும், 1 முதல் 10 வகுப்புகளுக்கு டிசம்பர் 19ம் தேதியும் தொடங்கும். அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 23ம் தேதி முடிந்து ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்ப...
Image
  தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு இனி.. அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை.. அரசு அதிரடி அறிவிப்பு..!!!! தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பொதுத்தேர்வு முடிய உள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என சற்று முன் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து 2022-2023 ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு...
Image
  5,529 பதவிக்கு 9.95 லட்சம் பேர் எழுதிய குரூப் 2, 2ஏ தேர்வுக்கான கீ ஆன்சர் 27ம் தேதி வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தகவல் 5,529 பதவிக்கு 9.95 லட்சம் பேர் எழுதிய குரூப் 2, 2ஏ தேர்வுக்கான கீ ஆன்சர் வருகிற 27ம் தேதி வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவி (நேர்முக தேர்வு பதவி) 116 இடங்கள், குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,012 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தேர்வை, பெண்கள் 6,81,880 பேர், ஆண்கள் 4,96,247 பேர், மூன்றாம் பாலினத்தவர் 48 பேர், மாற்றுத்திறனாளிகள் 14,531 பேர் என 84.44 சதவீதம் பேர் எழுதினர். அதாவது, 9 லட்சத்து 94 ஆயிரத்து 878 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1 லட்சத்து 83 ஆயிரத்து 285 பேர் தேர்வு எழுதவில்லை. இந்த நிலையில் இந்த குரூப்2, 2ஏ தேர்வுக்கான கீ ஆன்சர் வருகிற 27ம் தேதி வெளியிடப்படுகிறது. இது குறித்து டிஎன்பிஎஸ...
Image
  இளைஞர்களே.. சென்னையில் வருகின்ற மே 27-ஆம் தேதி.. அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து வருகின்ற மே 27 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இந்த வேலை வாய்ப்பு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதை 30 வயதுக்குட்பட்ட 8,10,12, ITI , டிப்ளமோ மற்றும் டிகிரி படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்துகொள்ள வருவோர் கல்விச்சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் எடுத்து வர வேண்டும். கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக வேலை வாய்ப்பு முகாம் நடத்த படாமல் இருந்த நிலையில் தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Image
BC, MBC, SC, ST பிரிவினருக்கு வேலை.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!!! தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக வேலைவாய்ப்புகள் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. அதனால் பெரும்பாலான இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி முதலமைச்சர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இன்று முதல் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. வயது: SC/ST - 35, BC/MBC - 33 சம்பளம்: ரூ.65,000 கல்வித்தகுதி: பட்டய படிப்பு தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல். இதில் விருப்பம் உள்ளவர்கள் www.tn.gov.in/tncmfp (or) www.bim.edu/tncmfp என்ற இணையத்தளத்தில் ஜூன் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Image
  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ... திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டி மையம் ஆகியவை இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (27-ந் தேதி ) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில், தனியார் துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவு தாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் வாரம் தோறும் வெள்ளிக் கிழமைகளில் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது. அதன்படி வருகின்ற 27.05.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் மைய வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8-ம் வகுப்பு, ...
Image
  தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - இன்று அறிவிப்பு ! கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அறிவிக்கவிருக்கிறார். தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பா் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. இந்தச் சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தோவு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தோவுகள் நடத்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் மாநிலம் முழுவதும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்குப் பொதுத் தோவுகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. இந்தப் பொதுத்தோவு மே இறுதியில் முடிவடைகிறது. இதற்கிடையே மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்...
Image
  10ம் வகுப்பு கணித தேர்வு 'கசந்தது':''தியரி' பாணியில் கேள்வி; மாணவர்கள் சோகம் திருப்பூர்:பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில் 5 மதிப்பெண் சில கேள்விகள், 'தியரி' பாணியில் கேட்கப்பட்டிருந்ததால், 'சென்டம்' எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வு நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில், 32 ஆயிரத்து, 52பேர் தேர்வு எழுதினர். 2 ஆயிரத்து, 56 பேர் பங்கேற்கவில்லை. கணிதத்தை பொருத்தவரை, ஒரு மதிப்பெண்,இரு மதிப்பெண் கேள்விகள் எளிதாகவும். ஐந்து மதிப்பெண் கேள்விகள் சில, 'தீர்வு' காணும்படி இல்லாமல், 'தியரி' அடிப்படையிலே கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
Image
  10-ம் வகுப்பு கணிதத் தேர்வு கடினம் 10-ம் வகுப்பு கணிதப் பாடத்தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, ''கணித வினாத்தாள் எதிர்பார்ப்புக்கு மாறாக கடினமாக அமைந்துவிட்டது. ஒரு மதிப்பெண் வினாவில் 2 கேள்விகள் நுண்ணறிவு சார்ந்தவையாக இருந்தன. அதேபோல், 2, 5 மதிப்பெண் வினாக்களும் மாணவர்கள் நன்கு சிந்தித்து பதிலளிக்கும் வகையில் இருந்ததால் மாணவர்கள் சிரமப்பட்டனர். இதுதவிர எண் 28 மற்றும் 42 கட்டாய வினாக்கள் கடினமாக இருந்தன. வரைபடம் மற்றும் வடிவியல் பகுதிகளின் கேள்விகள் மட்டும் சற்று எளிதாக இருந்தன. இதனால் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும்'' என்றனர்.