Posts

Showing posts from May 24, 2022
Image
  10ம் வகுப்பு கணிதத் தேர்வை எத்தனை மாணவர்கள் எழுதவில்லை தெரியுமா? இன்று நடைபெற்ற 10ம் வகுப்பு கணிதத் தேர்வை 45 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடந்த சில நாட்களாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது என்பது மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு எழுதி வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம் இந்த நிலையில் தமிழகத்தில் இன்று நடந்த 10ம் வகுப்பு கணிதத் தேர்வு 45,618 மாணவர்கள் எழுதவில்லை என தமிழக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 45,618 வகுப்பு பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்ற நிலையில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஏன் எழுதவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.
Image
  TNPSC Group 2 Cut Off: ஒரு இடத்திற்கு 10 பேர் தேர்வு; கட் ஆஃப் குறையுமா? TNPSC Group 2 exam 2022 cut off marks details here: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு இருக்கும்? எத்தனை வினாக்களுக்கு சரியாக விடையளித்தவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகலாம் என்பதை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 முதல் நிலைத் தேர்வு கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்றது. 5529 பதவிகளுக்கு நடந்த இந்த தேர்வை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர். சுமார் 1.83 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை. இதனிடையே, குரூப் 2 முதல்நிலைத் தேர்விலிருந்து முதன்மைத் தேர்வுக்கு, ஒரு பதவிக்கு 10 பேர் (1:10) என்ற வீதத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடைசி கட் ஆஃப் மதிப்பெண்களில் தேவைக்கு அதிகமானோர் இருந்தாலும், அத்தனை பேரும் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். அதாவது ஒரு பதவியில் கடைசி ஒரு இடத்திற்கு 10 பேர் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலையில், அதே கட் ...
Image
  தமிழகத்தில் கோடைகால விடுமுறைக்கு பிறகு 1முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி நாளை அறிவிப்பு வெளியாகும்: அன்பில் மகேஷ் சென்னை: தமிழகத்தில் கோடைகால விடுமுறைக்கு பிறகு 1முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி நாளை அறிவிப்பு வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளிகள் குறித்து அறிவிப்புகளை பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் காலை 10 மணிக்கு வெளியிடுகிறார். வரும் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடைபெறும் என்பது பற்றியும் நாளை அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார்.
Image
  TNPSC Group 4, VAO Exam: புதிய சிலபஸ்; தேர்வு முறையை கவனமா பாருங்க! TNPSC group 4 VAO exam pattern and syllabus details here: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான சிலபஸ் மாற்றப்பட்டுள்ளது. எனவே, தேர்வு முறை, பாடத்திட்டம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் குறித்து இப்போது பார்ப்போம். தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதனிடையே குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman) இந்த பணியிடங்கள்...
Image
 ரூ.2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் உளவியலாளர் வேலை வேண்டுமா? - டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு தமிழ்நாடு சிறை பணிகளில் அடங்கிய உளவியலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூன் 16 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: உளவியலாளர் காலியிடங்கள்: 04 சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,06,700 தகுதி: உளவியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.06.2022 கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள்: 06.08.2022 மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Documen...