Posts

Showing posts from May 23, 2022
Image
  2074 காலியிடங்களுக்கான SSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் பி, சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  விளம்பர எண். Phase-X/2022/Section Posts தேர்வு பெயர்: SSC Selection Post Exam- 2022 மொத்த காலிடங்கள்: 2074 பணி: MTS பணி: Fieldman பணி: Junior Scientific Officer பணி: Fertilizer Inspector பணி: Junior Geological Assistant பணி: Data Entry Operation பணி: Chargeman பணி: Technical Officer பணி: Pharmacist பணி: Nursing Assistant பணி: Account Clerks பணி: Farm Assistant பணி: Cleaner பணி: Radio Technician பணி: Canteen Assistant பணி: Mechanic பணி: Electrician பணி: Welder பணி: Medical Assistant பணி: Library Assistant பணி: Seed Analyst பணி: Sub Editor பணி: Staff Car Driver பணி: Head Clerk பணி: Caretaker சம்பளம்: 7 ஆவது ஊதியக் குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிவாரியான தக
Image
  "தபால் துறையில் 4,310 காலிப்பணியிடங்கள்".. விண்ணப்பங்கள் வரவேற்பு... தமிழகத்தில் தபால் துறையில் 4,310 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை வட்டாரத்தில் உள்ள கிராமின் டாக் சேவையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் துறையில் மொத்தமாக 4310 காலிப்பணியிடங்கள் உள்ளன . பிரான்ச் போஸ்ட் மாஸ்டர் பணிக்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூபாய் 12 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். அதையடுத்து அசிஸ்டன்ட் பிரான்ச் போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தபால் நிலைய பொருட்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு சென்று தபால்களை புக்கிங் செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். அதைத்தொடர்ந்து தக் சேவக் பணியிடங்களுக்கு பத்தாம்
Image
  பெற்றோர்கள் ஒரு குழந்தையோடு மற்றொரு குழந்தையை ஒப்பிடக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றோர்கள் ஒரு குழந்தையோடு மற்றொரு குழந்தையை ஒப்பிடக்கூடாது எனவும், ஒவ்வொரு குழந்தைக்கும் தனி திறமை இருக்கும் எனவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள லெம்பலகுடி இலங்கை மறுவாழ்வு முகாமில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்பில் மகேஷ் கூறியதாவது: இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ள மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளனர், அந்த கோரிக்கையின்படி உயர்கல்வித்துறை அமைச்சர் தமிழக முதலமைச்சருடன கலந்து பேசி நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது, இங்குள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக கடந்து கூட்டத்தொடரில் 314 கோடி ரூபாய் நிதியை தமிழக முதலமைச்சர் ஒதுக்கினார், அதுமட்டுமில்லாமல் தற்போது இலங்கையில் இருக்கக்கூடிய பிரச்சனையை கருத்தில் கொண்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு ‌123 கோடி ரூபாயை அனுப்பி வைத்து அங்கு உள்
Image
  TN TET Exam 2022 | தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ஜூலை இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு! தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானது (TRB), தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி 6.3 லட்சத்திற்கும் அதிகமானோர் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தேர்வு வருகின்ற ஜூலை மாதம் இறுதிக்குள் நடக்க உள்ளதாக அறிவிப்பு தரப்பட்டுள்ளது. ஆனால், தேர்வுக்கான தேதிகள் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், தேர்வு நடத்தப்படும் என்கிற அறிவிப்பை மட்டும் தந்துள்ளனர்.பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிவதற்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். எனவே இந்த தேர்வுகள் முடிந்ததும் ஜூலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்படும். தமிழ்நாட்டை சேர்ந்த கல்லூரிகளில் கற்பிப்பதற்கு தகுதி பெற, TN TET என்கிற தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதுவே இதற்கான குறைந்தபட்ச தகுதியாக வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், TN TET தாள் 1'இல் தகுதி பெறுபவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்க தகுதியுடையவர்கள் மற்றும் தாள் 2'
Image
  TNPSC Group 2: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் எவ்வளவு? TNPSC group 2 exam cut off marks details here: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும், கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற்றது. 5529 பதவிகளுக்கு தமிழகம் முழுவதும் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதியுள்ளனர். இதற்கான விடைத்தாள் மதிப்பீடு மே - ஜூன் மாதங்களில் நடைபெற்று, தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கான ஆன்சர் கீ ஒரிரு நாட்களில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகும் என தெரிகிறது. குரூப் 2 தேர்வைப் பொறுத்தவரை தேர்வு ஆவரேஜ் அளவில் இருந்ததாக பெரும்பாலான தேர்வர்கள் கருதுகின்றனர். தமிழ் மற்றும் கணித பகுதி எளிமையாக இருந்ததாகவும், பொது அறிவு பகுதி சற்று கடினமாக இருந்ததாகவும் பல தேர்வர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் தமிழ் மொழிப்பாட வினாக்
Image
  TNPSC Group 2: கேள்விகள் கடினம்; கட்-ஆஃப் மதிப்பெண் குறையுமா? தமிழகம் முழுவரும் நேற்று நடைபெற்ற குருப் 2 தேர்வில் 2 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் கட் ஆஃப் மார்க் குறையுமா என்று கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தி தகுதியான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசு பணியிடங்களை நிரப்பும் வகையில் நேற்று குருப் 2 தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கு அதிகமானோர் எழுதிய இந்த தேர்வில். கேள்விகள் அனைத்தும் எளிமையாக இருந்ததாக பலரும் கூறியுள்ள நிலையில். தமிழ் பாடத்தில் இரண்டு கேள்விகள் கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பொதுஅறிவு பிரிவில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளும் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் கூறியுள்ளனர். மேலும். வழக்கம்போல் இந்த ஆண்டும் கேட்கப்பட்ட கேள்விகளில் தவறு உள்ளாகவும் குறிப்பாக தமிழக பட்ஜெட் குறித்து கேட்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தொடர்பான கேள்வியும், தாவரவியலாளர் ஜானகி அம்மாள் என்
Image
  குரூப் 2, 2A தேர்வெழுதியோர் கவனத்திற்கு.. இன்னும் 5 நாட்களில்.. TNPSC முக்கிய அறிவிப்பு ..!!!! தமிழகம் முழுவதும் நேற்று குரூப் 2 குரூப் 2a தேர்வு திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்வு மூலமாக சுமார் 5529 காலிபணியிடங்களுக்கு 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 1.83 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து தேர்வுக்கான விடைக் குறிப்புகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குரூப் 2, குரூப் 2a தேர்வில் எந்த கேள்வியும் தவறானவை அல்ல. குரூப் 2 தேர்வின் கேள்வி மொழிபெயர்ப்பு ஆப்ஷன்களில் எந்த தவறும் கிடையாது. தேர்வுக்கான தற்காலிக விடை குறிப்பு தேர்வாணைய இணையதளத்தில் ஐந்து நாட்களில் வெளியிடப்படும்.  விடை குறிப்புகள் மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபணைகளை வழங்க ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும். வல்லுநர் குழு கூடி ஆட்சேபணைகளை பரிசீலனை செய்து இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.