Posts

Showing posts from May 21, 2022
Image
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி - ஆசிரியர்களை தேர்வு செய்ய உத்தரவு! அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க திறன் வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. தமிழ்நாட்டில் 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க எஸ்சிஇஆர்டி (State Council of Educational Research and Training) உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஆங்கில புலமையை திறன் வாய்ந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஆங்கிலத்தை சரளமாக பேசுவதில் திறனும், கற்பித்தலில் ஆர்வமும் உள்ள ஆசிரியர்களை ஆன்லைனில் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் அரை மணிநேரம் தேர்வு நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர...
Image
  டிஎன்பிஎஸ்இ குரூப் 2,2ஏ தேர்வு.. 1.83 லட்சம் பேர் எழுதவில்லை. வெளியான அதிர்ச்சி தகவல்.. இன்று நடைப்பெற்ற குரூப் 2, 2 ஏ தேர்வை 1.83 லட்சம் பேர் எழுதவில்லை என்று டிஎன்பிஎஸ்இ தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின் குரூப் 2, 2ஏ பிரிவுகளில் காலியாகவுள்ள 5,529 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற்றது. இன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை 117 மையங்களில் தேர்வு நடைபெற்றது.இன்று நடைபெற்று தேர்வில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறமால் இருக்க, 4 ஆயிரத்து 12 பேர் முதன்மை கண்காணிப்பாளராகவும் 58 ஆயிரத்து 900 பேர் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் குரூப் 2, 2ஏ தேர்விற்கு 11.78 பேர் ஹால் டிக்கேட் பதவிறக்கம் செய்த நிலையில் 9.94 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர் என்றும் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்இ தேர்வினை 1.83 லட்சம் பேர் எழுதவில்லை என்றும் அதன் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
Image
  TNPSC குரூப் 2 தேர்வு எப்படி இருந்தது? வினாக்கள் எப்படி கேட்கப்பட்டன? TNPSC group 2 exam how questions asked?: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வு எப்படி இருந்தது, வினாக்கள் எப்படி கேட்கப்பட்டுள்ளது என்பது குறித்து இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வின் முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற்றது. 5529 பணியிடங்களுக்கான தேர்வை 11 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர். தேர்வைப் பொறுத்தவரை தமிழ் மொழிப்பாடம் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் இலக்கணம் சார்ந்த வினாக்கள் எளிமையாக இருந்ததாகவும், ஆனால் நூல், நூலாசிரியர் சார்ந்த வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். திருக்குறள் சார்ந்த வினாக்கள் மற்றும் இலக்கியத்தில் ஒரு சில பகுதி வினாக்கள் எளிமையாக இருந்தது. அடுத்தப்படியாக, கணிதப் பகுதி எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். அதில் 25 வினாக்களுக்கு 25 வினாக்களுமே விடையளிக்க கூடியதாக இருந்தது. பெரும்பாலும் தனிவட்டி, கூட்டு வட்டி சா...
Image
  TNPSC : 'இவங்கெல்லாம் பாஸ் ஆக வாய்ப்பு இருக்கு' : குரூப் 2, 2ஏ தேர்வுகளை எழுதியவர்கள் சொன்ன தகவல் தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் இன்று தொடங்கி, நடைபெற்றன. தேர்வுகள் பெரும்பாலும் எளிதாகவே இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர் மொத்தம் 5,529 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வுக்கு, மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதற்காகத் தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பொது ஆங்கிலம் பகுதியில் தேர்வெழுத 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 586 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். பொதுத் தமிழ் பகுதியில் தேர்வெழுத 9 லட்சத்துக்கு 46 ஆயிரத்து 589 பேர் விண்ணப்பித்தனர். இதில் இருந்து 5,500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதன்மைத் தேர்வுக்கு அனுப்பப்படுவர். குரூப் 2 தேர்வு எப்படி இருந்தது என்பது குறித்துத் தேர்வர்கள் சிலரிடம் பேசினோம். லிபிரியா ''பொதுத் தமிழ் பகுதி மிகவும் எளிமையாக இருந்தது. இதில் பெரும்பாலும் பழைய கேள்வித் தாள்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பள்ளி மாணவர்களாலும் எழுத முடியும் வகையில் பொதுத்தமிழ் கேள்விகள் இடம்பெற...
Image
  தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு TNPSC தேர்வில் முன்னுரிமை ''தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.,தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக,'' தேர்வாணைய உறுப்பினர் ஆரோக்கியராஜ் கூறினார்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அவர் கூறியதாவது: இன்று டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 க்கான தேர்வு நடக்கிறது. 5,529 பணியிடத்திற்கு தமிழகம் முழுவதும் 11,78 ,175 பேர் தேர்வு எழுதுகின்றனர். 3 ஆண்டுகளாக தேர்வு நடக்காத நிலையில் தற்போது தேர்வாணையத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு கணினி மயமாக்கப்பட்டதால் இத்தேர்வில் நம்பிக்கை வந்துள்ளது. தேர்வு மையத்திற்கு தாமதமாக வருவதை தவிர்த்து காலை 8:59 மணிக்கு தேர்வு அறைக்குள் வர வேண்டும். தமிழகத்தில் பெண்களே அதிகமாக தேர்வு எழுதுகின்றனர் . வட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை இல்லை. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆள் மாறாட்டம் போன்ற செயல்கள் நடக்காமல் இருக்க தொழில்நுட்ப வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு பிப்ரவரியில் முடிவு வெளியாகும், என்றார்.
Image
 4 ஆயிரம் மையங்களில் இன்று குரூப் 2 தேர்வு - 11.78 லட்சம் பட்டதாரிகள் எழுதுகின்றனர் சென்னை / சிவகங்கை: அரசுத் துறைகளில் உள்ள 5,529 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. இத்தேர்வை 11.78 லட்சம் பட்டதாரிகள் எழுதுகின்றனர். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட பல்வேறு பதவிகளில் உள்ள 5,529 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் 4,012 தேர்வு மையங்களில் இன்று நடக்கிறது. 4.96 லட்சம் ஆண்கள், 6.82 லட்சம் பெண்கள், 48 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 11.78 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் 14,534 பேர் மாற்றுத் திறனாளிகள். இத்தேர்வு கொள்குறி வினாத்தாள் முறையில் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. காலை 9.30 முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். அனைவரும் 8.59 மணிக்குள் தேர்வறைக்குள் வந்துவிட வேண்டும். தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை அனைத்து பக்கங்களுடன் முழுமையாக பிரின்ட் எடுத்துவர வேண்டும். ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையும் வைத்திருக்க வேண...