
TNPSC குரூப்-4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள்: சென்னை, கோவையில் நடத்தும் கல்வி மையம் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் குரூப்-4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளிவந்து விண்ணப்பிக்கும் காலமும் முடிவடைந்துள்ளது. 7301 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து மாணவர்களுக்கு உடனடியாக குரூப்-4 போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சியளிக்க Dr. அம்பேத்கர் கல்வி மையம் தயாராகி உள்ளது. ஏற்கெனவே நடந்து வந்த குரூப்-2 வகுப்பிற்கான தேர்வு 21.5.2022 அன்று நடைபெற உள்ளதால் 22.5.2022 அன்றே குரூப்-4 வகுப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள குறுகிய கால இடைவெளியே உள்ளதால் மாதிரித் தேர்வை தொடர்ந்து விரிவான கலந்துரையாடலையும் நடத்த Dr. அம்பேத்கர் கல்வி மையம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து Dr. அம்பேத்கர் கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் கூறுகையில், ''குரூப்-4 தேர்வில் பங்குபெறும் மாணவர்கள் தயாராக எட்டு வாரங்கள் மட்டும் உள்ளதால் பயிற்சி வகுப்புகள், தொழில்நுட்ப ரீதியாகவும் மாணவர்களுடைய திறமையை வெளிக்கொணரும் வகையிலு...