Posts

Showing posts from May 19, 2022
Image
  பொது தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு, துணை தேர்வு நடத்த ஏற்பாடு! பொது தேர்வுகளில் பங்கேற்காத, 1.17 லட்சம் மாணவர்களுக்கு, துணை தேர்வு நடத்த ஏற்பாடு செய்யுமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. மூன்று வகுப்புகளுக்கும் சேர்த்து, 1.17 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்வில்லை.இவ்வளவு நபர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தும், பங்கேற்க முடியாத காரணங்களை கண்டறிந்து, பள்ளிக் கல்வித் துறைக்கு விரிவான அறிக்கை தர, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்த தேர்வர்கள் அனைவரையும், ஜூலையில் நடத்தப்படும் உடனடி தேர்வில் பங்கேற்க வைக்க ஏற்பாடு செய்யுமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Image
  தேர்வு இல்லாமல் தபால் துறை வேலை: 10-ம் வகுப்பு மார்க் எவ்வளவு தேவை? India post recruitment 2022 for 38926 GDS posts cut off mark details: போஸ்ட் ஆபிஸில் வேலை பார்க்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. இந்திய தபால் துறை நாடு முழுவதும், கிராம தபால் ஊழியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். இந்தநிலையில் 10 ஆம் வகுப்பில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற கிராம தபால் ஊழியர் (BPM) மற்றும் உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 38,926 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 4,310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2022 ஆகும் கிராம தபால் சேவை மொத்த காலியிடங்கள...
Image
  TNPSC 2022 குரூப் 4 தேர்வுகளே.. இலவச பயிற்சி வகுப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!!!! தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து வருகின்ற ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு மூலமாக 7,382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவையாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் இருக்கும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் குரூப்-4 தேர்வு எழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் இந்த தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். குறிப்பாக தமிழகம் முழுவதும் சுமார் இருபத்தி ஒரு லட்சம் பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவக்கூடிய வகையில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வ...
Image
  தேர்வில் ஆள் மாறாட்டம்தடுக்க புதிய நடைமுறை.!!! TNPSC அதிரடி தகவல்.!!! பணி நியமன தேர்வுகளை மேலும் நவீனப்படுத்தும் வகையில், எதிர்காலத்தில் தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்'டுக்கு பதில், 'பயோமெட்ரிக்' விரல் ரேகை பதிவு முறையை கொண்டு வர, டி.என்.பி.எஸ்.சி., திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில், பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வை வெளிப்படை தன்மையுடனும், எந்தவித முறைகேடுகளும் இன்றி நடத்த, புதிய தொழில்நுட்ப வசதிகள் செய்யப்படுகின்றன.இந்த வகையில், வரும் காலத்தில் தேர்வு எழுத வருவோர், ஹால் டிக்கெட்டை அச்செடுத்து வருவதற்கு பதில், தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் விரல் ரேகை பதிவு முறையை அறிமுகம் செய்ய, டி.என்.பி.எஸ்.சி., திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆலோசனைகள் முடிந்துள்ளன. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி.,யால் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோரின் நேர்மை தன்மையை தெரிந்து கொள்ள, தேர்வு முடிவுகள் வந்ததும், தேர்வர...
Image
  பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு; 'ஈஸி' என்பதால், மாணவர்கள் உற்சாகம்.. திருப்பூர் : பத்தாம் வகுப்பு ஆங்கிலமொழி தேர்வு சுலபமாக இருந்ததாக மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.திருப்பூர் மாவட்டத்தில், 108 மையங்களில், 29 ஆயிரத்து, 874 மாணவர்கள் பங்கேற்றனர்; 2048 பேர் தேர்வு எழுதவில்லை. சராசரி மாணவர்களும் மதிப்பெண்களை குவிக்கும் அளவுக்கு வினாத்தாள் எளிதாக இடம்பெற்றிருந்தன.
Image
 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒராண்டு பணி நீட்டிப்பு தமிழக அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒராண்டு பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: 3 ஆயிரம் பேர்களுக்கான ஊதியம் மற்றும் இதரபடிகளை வழங்கிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
  TNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி? TNPSC group 2 exam OMR shading and Time Management tips: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு வருகின்ற மே 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வில் ஓ.எம்.ஆர் ஷீட்டை எப்படி நிரப்புவது? தேர்வுக்கான கால அவகாசத்தை எப்படி முறையாக பயன்படுத்துவது என்பது குறித்து இப்போது பார்ப்போம். முதலில் தேர்வாணையம் அறிவித்துள்ளப்படி கருப்பு நிற பந்துமுனை பேனாவை மட்டுமே தேர்வில் பயன்படுத்துங்கள். வேறு நிற பேனாக்களை பயன்படுத்த வேண்டாம். அடுத்ததாக, ஓ.எம்.ஆர் ஷீட் இரண்டு பகுதிகளாக இருக்கும். முதல் பகுதி நாம் விடையளிக்க கூடிய பகுதி. இரண்டாம் பகுதி நம்முடைய சுய விவரங்களை நிரப்ப வேண்டிய பகுதி. இவை ஓ.எம்.ஆர் ஷீட்டின் முதல் பகுதியில் இருக்கும். இரண்டாம் பகுதியில் வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். அந்தப் பக்கத்தில் உங்களின் கையொப்பம் இட வேண்டும். இதனை தேர்வு துவங்கும் முன் தேர்வறையில் இட வேண்டும். ஓ.எம்.ஆர் ஷீட்டில் தேர்வரின் பெயர், பதிவெண், பாடம், தேர்வு மையம், தேதி உள்ளிட்ட விவரங்கள் ஏற்கனவே பிர...
Image
  ஜூன் மாதமே பள்ளிகளைத் திறக்க வேண்டும் - அமைச்சரிடம் கோரிக்கை ஜூன் மாதமே பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்த குமார் தமிழ்நாடு முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில், 'தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பொதுத்தேர்வு முடிந்து கடந்த 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை நடைமுறையில் உள்ளது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதம் 31ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிந்து சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கு செல்கிறார்கள். மீதமுள்ள ஆசிரியர்கள் ஓய்வில் தான் இருப்பார்கள். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து அரசு அறிவித்தபடி ஜூன் 13ஆம் தேதி பள்ளிகளை திறந்து மாணவர்கள் படிப்பை உறுதி செய்திட வேண்டும். ஏற்கனவே 800 நாட்கள் கரோனா நோய் தொற்று காலத்தில் வீட்டில் இருந்துவிட்டு...