Posts

Showing posts from May 18, 2022
Image
  தமிழ்நாட்டில் ஜூன் 20-ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு தமிழ்நாட்டில் ஜூன் 20ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் ஜூன் மாதம் இருபதாம் தேதி திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது ஒரு வாரம் முன்னதாகவோ பின்னராகவோ இருக்கலாம். தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு 38 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 10 ஆயிரத்து 300 க்கு மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் கழிவறை உட்பட 18 ஆயிரம் கட்டிடங்கள் கட்டப்படும். கொரோனா காலத்துக்கு பின்னர் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சம் உயர்ந்து, தற்போது 53 லட்சமாக உள்ளது. அதிகபடியான ஆசிரியர்கள் தேவைப்படும் இடத்தில...
Image
  பொது தேர்வில் ஆப்சென்ட் ஆன 1.18 லட்சம் மாணவர்களின் நிலை குறித்து அறிக்கை தர கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு. கொரோனாவிற்கு பின் நடந்த அரசு பொது தேர்வில் ஆப்சென்ட் ஆன 1.18 லட்சம் மாணவர்களின் நிலை குறித்து அறிக்கை தர கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 ல் கொரோனா பரவல் துவங்கியது. தொடர்ந்து 2 ஆண்டுகளாக பள்ளி திறக்கப்படவில்லை. மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர். பள்ளி விடுமுறையால் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்று விட்டனர். பல மாணவர்கள் பிழைப்பிற்காக பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். தற்போது நடக்கும் 10 ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொது தேர்வில் ஆப்சென்ட் எண்ணிக்கை 1.18 லட்சமாக உள்ளது. இதன்படி 10 ம் வகுப்பு படிக்கும்12 லட்சம் பேரில் 42,000, பிளஸ் 1 படிக்கும் 9 லட்சம் பேரில் 43,533,பிளஸ் 2ல் 10 லட்சம் பேரில்32,600என 1 லட்சத்து 18 ஆயிரத்து 133 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர். கொரோனாவிற்கு முன்னர் வரை நடந்த அரசு தேர்வுகளில் இறப்பு, இடைநிற்றல் என சொற்ப அளவிலேயே மாணவர் 'ஆப்சென்ட்' இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தே...
Image
  TRB: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான தெரிவுப் பட்டியல் வெளியீடு.! ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு.! பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான தெரிவுப் பட்டியல் வெளியீடு குறித்த ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான அரசுப்‌ பல்தொழில்நுட்பக்‌ கல்லூரிகளுக்கான 1060 விரிவுரையாளர்‌ காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம்‌ மூலம்‌ பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர்‌ தேர்வு வாரிய அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டன. கணினி வழித்‌ தேர்வுகள்‌ 8.2.2021 முதல்‌ 1312.2021 வரை நடத்தப்பட்டு, தேர்வர்களின்‌ மதிப்பெண்கள்‌ 08.03.2022 அன்று ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளன. 11.03.2022 நாளிட்ட ஆசிரியர்‌ தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில்‌, பணிநாடுநர்கள்‌ தங்களது கல்வித்‌ தகுதி மற்றும்‌ பணி அனுபவம்‌ தொடர்பான கூடுதல்‌ சான்றிதழ்களை 7 ஆவணங்களை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளம்‌ வழியாக 11.03.2022 முதல்‌ 01.04.2022 வரை பதிவேற்றம்‌ செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. கூடுதல்...
Image
  இந்திய அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை... 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும் இந்தியா முழுவதும் பல்வேறு வட்டங்களில் காலியாக உள்ள BPM/ABPM/ Dak Sevak என மொத்தம் 38,926 கிராமின் டக் சேவக் (Gramin Dak Sevak - GDS) பதவிகளுக்கான காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்தியா போஸ்ட் (India Post)அழைப்பு விடுத்து உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் ஜூன் 05, 2022 என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்வமும், தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் இந்தியா போஸ்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளமான indiapost.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருப்பதும், சைக்கிள் ஓட்ட தெரிந்திருப்பதும் கட்டாயம் ஆகும். இந்தியா போஸ்ட் Gramin Dak Sevak ஆட்சேர்ப்பு 2022: பதவி: கிராமின் டக் சேவக் (GDS) மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 38,926 சம்பள அளவு: மாதம் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை 2022-ஆம் ஆண்டிற்கான இந்தியா போஸ்ட் GDS ஆட்சேர்ப்பு தகுதி வரம்பு: பள்ளி கல்வியில்10-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதற்கான சான்றிதழ் வேண்டும். ம...
Image
  குரூப் 2 தேர்வு: தமிழகத்தில் 5,000 பதவியிடங்களுக்கு 11.78 லட்சம் பேர் போட்டி தமிழகத்தில் வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதவுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ பதவிகளில் காலியாக உள்ள 5,000 பதவியிடங்களுக்கான தேர்வு வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணைய தலைவர் பாலசந்திரன் அளித்த பேட்டியில், "குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி 21-ம் தேதி நடைபெறும். தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு நடைபெறும் மையத்திற்கு வர வேண்டும். 9 மணிக்கு பிறகு தேர்வு அறைக்கு செல்ல அனுமதி இல்லை. 9.30 மணிக்கு தேர்வு தொடங்கி 12.30 மணிக்கு தேர்வு நிறைவு பெறும். ஆனால் 12.45 மணி வரை தேர்வர்கள் தேர்வு அறையில்தான் இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் 11.78 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர். தற்போது வரை 9 லட்சம் பேர் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர். அனைவரும் வரும் நாட்களில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து விடுவார்கள் என்று எதிர்பார்கிறோம். இதில் ஆண்கள் 4.96 லட்சம் பேர். பெண்கள் 6.8...
Image
  குரூப் 2 வினாக்கள் பிழையின்றி அமையுமா? தேர்வர்கள் எதிர்பார்ப்பு குரூப் 2 வினாக்களை பிழையின்றி தயாரிக்க வேண்டுமென தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான தேர்வினை வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. சுமார் 11 லட்சம் பேர் இத்தேர்வினை எதிர்கொள்கின்றனர். ஓரிரு வினாக்கள் பெரும்பாலும் பிழைகளுடன் தயாரிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. குரூப் 2, குரூப் 4 தேர்வுகளை முறையே 11 லட்சம், 22 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து எழுதுகின்றனர். ஆனால், வினாக்கள் தவறாக கேட்கப்படுவதால் 1 தேர்வர் பல லட்சம் பேருக்கு பின்னால் தள்ளப்படுகின்றார். எனவே, தேர்வாணையம் மாணவர்களின் வாழ்க்கை மற்றும் வேலை தொடர்பானது என்பதை கருத்தில் கொண்டு பிழைகள் இல்லாமல் வினாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.