Posts

Showing posts from May 17, 2022
Image
  டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு; வெளியான புதிய தகவல் - தேர்வு முடிவுகள் எப்போது? குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சியின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலைத்தேர்வு (Preliminary exam) ஜனவரி 3ஆம் தேதி, 2021ஆண்டில் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதிய இந்த தேர்வில் ஒரு பதவிக்கு 50 பேர் வீதம் தேர்ச்சி பெற்ற 5 ஆயிரம்பேரின் பதிவு எண்களை இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருந்தது. இதன் ஒரு பகுதியாக, கடந்த மே 04ஆம் தேதி 2022, இந்த முதன்மைத்தேர்வினை சென்னையில் அமைக்கப்பட்ட 37 மையங்களில் 3687 பேர் எழுதினர். இந்த குரூப் 1 தேர்வின் முதன்மைத்தேர்வு(Mains Examination)க்கான விடைத்தாள்கள் திருத்துவதில் 90 சதவீதம் பணிகள் முடித்துள்ளது என்றும்; இந்த மாதம் இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஸ்சியின் தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் குரூப் 1 தேர்வு குறித்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ‌ அதன்படி, இத்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மெய...
Image
  தேர்வே இல்லாமல் 38,926 பேருக்கு வேலை: தபால் துறை பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? India post recruitment 2022 for 38926 GDS posts how to apply details here: இந்திய தபால் துறை நாடு முழுவதும், கிராம தபால் ஊழியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போஸ்ட் ஆபிஸில் வேலை பார்க்க வேண்டும் என விரும்புபவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். எனவே இந்தப் பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இப்போது பார்ப்போம். இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற கிராம தபால் ஊழியர் (BPM) மற்றும் உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிராம தபால் சேவை மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 38,926 தமிழ்நாட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை - 4,310 கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்...
Image
  ஐடிஐ முடித்தவர்களுக்கு 10,12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியீடு ITI முடித்தவர்களுக்கு 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்று வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ITI-களில் படித்து விட்டு, மேற்படிப்பைத் தொடர முடியாத சூழ்நிலையில், ITI-களில் படிப்பவர்களுக்கு 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, 8-ம் வகுப்புக்குப் பின் ITI-களில் சேர்ந்து படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும், 10-ம் வகுப்புக்கு பின் ITI சேர்ந்து படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ITI பயிலும் மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் வகையிலேயே இணை சான்று வழங்கப்படுவதாகவும், இது அரசு வேலைவாய்ப்புக்கோ அல்லது இதர வேலைவாய்ப்புக்கோ பொருந்தாது என்றும் அரச...
Image
 21-ம் தேதி TNPSC Group 2: எந்தெந்த பாடத்தில் எத்தனை கேள்விகள்? பாலச்சந்திரன் பேட்டி TNPSC chairman Balachandran explains group 2 exam question paper: வருகின்ற மே 21 ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ள நிலையில், எந்ததெந்த பாடங்களில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார். அந்த விவரங்களை இப்போது பார்ப்போம். குரூப் 2 தேர்வு தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேர்வாணையத் தலைவர் பாலச்சந்திரன், குரூப் 2 தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார். தேர்வு 9.30 மணி முதல் 12.30 மணி வரை என 3 மணி நேரம் நடைபெறும். 8.30 மணிக்கு தேர்வர்கள் தேர்வுக் கூட அறைக்கு வர வேண்டும். 9 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 11,78,175 பேர் குரூப் 2 தேர்வை எழுத உள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண்கள் 300. தமிழ் அல்லது ஆங்கிலப் பகுதியிலிருந்து 100 வினாக்கள் இடம்பெறும். பொது அறிவுப் பகுதியில் 75 வினாக்கள் கேட்கப...
Image
  டிஎன்பிஎஸ்சி தேர்வில் பயோமெட்ரிக் முறை..! தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..! டிஎன்பிஎஸ்சி தேர்வில் பயோமெட்ரிக் முறை கொண்டுவரப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வின்போது காலை 8.30 மணிக்கே தேர்வர்கள் மையத்திற்கு வர வேண்டும். 9 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குரூப் 2 தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களும் விண்ணப்பித்துள்ளனர். 3ஆம் பாலினத்தவர்கள் 48 பேரும், தமிழ் வழியில் படித்தவர்கள் 79,942 பேரும் விண்ணப்பித்துள்ளனர். கோப்புப் படம் அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களில் 1,15,843 பேர் தேர்வு எழுதவுள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் 5,624 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். மேலும், தேர்வு நேரத்தில் சோதனை செய்வதற்காக 6,400 கு...
Image
  RTE மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு... அறிவித்தது மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம்!! தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் அவகாசம் நிறைவடையும் நிலையில் மே.25 வரை அவகாசத்தை நீட்டித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் (Right To Education) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும். இந்த திட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதிவரை பெறப்படவுள்ளது. https://rte.tnschools.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.  மேலும் இதற்கு, மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களை இணையதளத்தில் பதவிவேற்றம் செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பின் மே 23 ஆம் தேதியன்று குலுக்கல் நடத்தப்பட்டு மாணவர்கள் ...
Image
  குரூப் 4 தேர்வு: மே 24-இல் இலவச பயிற்சி சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மே 24-இல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 4 நிலையிலுள்ள இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வரித்தண்டலா், நில அளவையாளா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட பதவிகளுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு மே 24-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சாந்தோம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. தகுதியுள்ள போட்டியாளா்கள் தங்களது ஆதாா் அட்டை நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவுள்ள புகைப்படத்துடன் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு, 044 24615160 தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
  மொத்தம்‌ 10,402 பணியிடங்கள். சிறப்பு ஆட்‌சேர்ப்பு முகாம்‌ மூலம் நிரப்பப்படும்.. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.. ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான பின்னடைவுப்‌ பணியிடங்கள்‌ சிறப்பு ஆட்‌சேர்ப்பு முகாம்‌ நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. தமிழக அரசின் முதன்மை செயலாளர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் " 2021-2022-ஆம்‌ ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரில்‌ ஆளுநர்‌ உரையில்‌, அரசுத்துறைகளில்‌ காணப்படும்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான பின்னடைவுப்‌ பணியிடங்கள்‌ சிறப்பு ஆட்‌சேர்ப்பு முகாம்‌ (Special Recruitment Drive) மூலம்‌ நிரப்பப்படும்‌ என்ற அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்த, தலைமைச்‌ செயலக துறைகளிடமிருந்து தொகுதிவாரியாக (Groupwise) உறுதிசெய்யப்பட்டு பெறப்பட்‌ட எண்ணிக்கையின்‌ அடிப்படையில்‌, ஆதிதிராவிடருக்கு 8173 இடங்களும்‌ பழங்குடியினருக்கு 2229 இடங்களும்‌ ஆக மொத்தம்‌ 10402 கண்டறியப்பட்ட குறைவுப்‌ பணியிடங்களை (Shortfall) தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ (பணி நிபந்தனைகள்‌) சட்டம்‌ மற்றும் 2016 பிரிவு 27ன் படியும், உரிய வழிமுறைகளைப்‌ பின்பற்றியும்...
Image
காலியாக உள்ள உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களில் வட்டார கல்வி அலுவலர் நியமனம்: 3 சதவீத ஒதுக்கீட்டில் விவரம் சேகரிப்பு தமிழகத்தில் காலியாக உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு, 3 சதவீத ஒதுக்கீட்டில் பிஇஓக்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விவரம் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் அரசுப் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக தலைமை ஆசிரியர் பணியிடங்களில், 3 சதவீதம் வட்டார கல்வி அலுவலர்களை கொண்டு நிரப்பிட வேண்டும். தற்போது அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, மாநிலம் முழுவதும் தகுதிவாய்ந்த வட்டார கல்வி அலுவலர்களின் விவரம் சேகரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ''தமிழகத்தில் காலியாக உள்ள 700க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு, பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் மூலம் நியமனம் நடக்கிறது. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் 3 சதவீத இடங்களுக்கு வட்டார கல்வி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்பதால், கடந்த ஜனவரி 1ம் தேதி நிலவரப...
Image
  மத்திய அரசில் 2065 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை இது தான்! தகுதியானவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க! மத்திய அரசில் காலியாக உள்ள 2065 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வருகின்ற ஜூன் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும். மத்திய பணியாளர் தேர்வாணையத்தின்( staff selection Commission) மூலமாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும் தேர்வு தேதி வெளியாகும். அதேப்போன்று இந்தாண்டும் சுமார் 2065 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10, 12 மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? தேர்வு செய்யும் முறை குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்ளலாம். கல்வித்தகுதி : விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10, 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் ஒரு சில பதவிகளுக்கு மட்டுமே கூடுதல் தகுதி தேவைப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட தகுதியும...