RTE - இலவச எல்.கே.ஜி.,க்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் தமிழக அரசின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து பெறாத, அனைத்து வகை சுயநிதி பள்ளிகளிலும், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பு என்ற நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீத இடங்களை, அரசு ஒதுக்கீடாக வழங்க வேண்டும். இந்த இடங்களில், ஏழை மாணவர்கள், கல்வி கட்டணமின்றி சேர்க்கப்படுவர். அவர்களுக்கான கட்டணத்தை, பள்ளிகளுக்கு அரசே வழங்கும். இந்த திட்டத்தில் சேரும் மாணவர்கள், எட்டாம் வகுப்பு வரை கல்வி கட்டணமின்றி, அதே பள்ளியில் படிக்கலாம். நடப்பு கல்வி ஆண்டுக்கான சேர்க்கைக்கு, ஏப்., 20ல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது; வரும், 18ம் தேதி முடிகிறது. மாநிலம் முழுதும், 1.30 லட்சம் காலியிடங்கள் உள்ளன. அவற்றுக்கு, இதுவரை ஒரு லட்சம் பேர் வரை பதிவு செய்து உள்ளனர்.
Posts
Showing posts from May 15, 2022
- Get link
- X
- Other Apps
குரூப் 2 மாதிரி தேர்வு 21ம் தேதி நடைபெறும் விழுப்புரம்-விழுப்புரத்தில் குரூப் 2 தேர்வுக்கான மாதிரி தேர்வு நடந்தது.குரூப் 2 தேர்வு வரும் 21ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதனையொட்டி, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 2 தேர்வுக்கான மாதிரி தேர்வு நேற்று காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடந்தது. குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த 265 பேர் தேர்வு எழுதினர்.
- Get link
- X
- Other Apps
NEET 2022: விண்ணப்பிக்க கடைசி நாள்; இந்த ஆண்டு நீட் தேர்வில் முக்கிய மாற்றங்களை தெரிஞ்சுக்கோங்க! மருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது தொடங்கியது. இதுவரை சுமார் 20 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாளாகும். இன்று இரவு 11.50 மணிக்குள் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நடைபெறவுள்ள தேர்வில் உச்ச வயது வரம்பில் மாற்றம் கொண்டு வந்தது மட்டுமின்றி, பல முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை இங்கே காணலாம். வயது வரம்பு இல்லை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான உச்ச வயது வரம்பை அரசு நீக்கியுள்ளது. முன்னதாக, நீட் தேர்வில் கலந்துகொள்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 25 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30ஆகவும் இருந்தது. தற்போது வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், மருத்துவ நுழைவு தேர்வில் இந்தாண்டு போட்டி அதிகரிக்க வாய்ப்புள்ளது. கேள்வியில் சாய்ஸ் இம்முறை தேர்...
- Get link
- X
- Other Apps
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு.. மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளத்தில். இந்திய தபால் துறையில் வேலை..! இந்திய தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Gramin Dak Sevaks (GDS). காலி பணியிடங்கள்: 4,310 சம்பளம்: ரூ.12,000 கல்வித்தகுதி: 10th வயது: 18-40 தேர்வு: தகுதி பட்டியல் விண்ணப்ப கட்டணம்: ரூ.100 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 5 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://indiapostgdsonline.gov.in என்ற இணையத்தள பக்கத்தை அணுகவும் .
- Get link
- X
- Other Apps
TNPSC Exam: நெருங்கிய குரூப்-2; கடைசி நேர தயாரிப்பு இப்படி இருக்கணும்! TNPSC group 2 exam last minute preparation tips for aspirants: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு வரும் சனிக்கிழமை (மே 21) நடைபெற உள்ள நிலையில், கடைசி நேர தயாரிப்பு மூலம் தேர்வில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பதை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 5529 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வை வரும் மே 21 ஆம் தேதி நடத்துகிறது. குரூப் தேர்வில் தற்போது முதல் நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. முதல் நிலைத் தேர்வு தகுதி தேர்வு என்றாலும், 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுவதால், போட்டி கடுமையாக இருக்கும். எனவே என்னதான் கஷ்டப்பட்டு இதுவரை படித்திருந்தாலும், கடைசி நேரத்தில் எவ்வாறு படிக்க வேண்டும், தேர்வில் எப்படி செயல்பட வேண்டும் என தெரியாமல் பலர் கோட்டை விட்டு வருகின்றனர். எனவே கடைசி கட்ட தயாரிப்பு எப்படி இருக்க வேண்டும் என இப்போது பார்ப்போம். தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடத்திலிருந்து 100 வினாக்கள் இடம்பெறும். இந்த பகுதி எளிமையானது மற்றும் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடியது. எனவ...