' மைனஸ்' மதிப்பெண் முறை குரூப் 2 தேர்வில் உண்டு! குரூப் 2 தேர்வில் 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு துறைகளில் குரூப் 2, 2ஏ பணிகளில் 5529 இடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வரும் 21ம் தேதி முதல் நிலை தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பு: தேர்வர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய பிரத்யேக விடைத்தாளை மட்டுமே பயன் படுத்த வேண்டும். எனவே விடைத்தாள் பெற்றதும் அதில் உள்ள தங்களின் விபரங்களை சரிபார்த்த பின்பே பயன்படுத்த வேண்டும். தவறாக இருந்தால் பயன்படுத்தும் முன்பே மாற்றி கொள்ள வேண்டும் தேர்வர்கள் அவர்களுக்கான விடைத்தாளுக்கு பதிலாக வேறு விடைத்தாள் பெற்று அதில் தங்களின் பதிவு எண்ணை தவறாக எழுதியிருந்தால் தேர்வரின் மொத்த மதிப்பெண்ணில் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும் மொத்த கேள்விகளுக்குமான விடைக்குறிப்பை 'ஷேடிங்' செய்வதில் சரியான முறையை பின்பற்றாவிட்டால் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும் வினா தொகுப்பு புத்தகத்தின் எண்ணை சரியாக குறிப்பிடாமலும் விடைத்தாளில் அதற்கான இடத...
Posts
Showing posts from May 13, 2022
- Get link
- X
- Other Apps
TNTET 2022 Exam: ஜுலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த முடிவு ஆசிரியர் தகுதித் தேர்வை ஜுலை மாத இறுதியில் நடத்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளி, கல்லூரி தேர்வுகளுக்கு பிறகு, ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசால் இயற்றப்பட்ட குழந்தைகளுக்குக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009-ன்படி ஆசிரியர் நியமனத்திற்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் இதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தாள் 1 மற்றும் தாள் 11 எழுதுவதற்கான அறிவிக்கை 07.03.2022 அன்று வெளியானது. இதற்கான, விண்ணப்பங்கள் 14.03.2022 முதல் 26.04.2022 வரை பெறப்பட்டன. இத்தேர்வுக்கு 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுநாள் வரையில் தேர்வு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஜுலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த முடிவு செய்து இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து...