டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..! கட்டாயம் 'மாஸ்க்' அணிய வேண்டும்..! வெளியான முக்கிய அறிவிப்பு..! டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குரூப் 2 தேர்வு மே 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இன்று வெளியிட்டிருந்தது. இந்நிலையில், குரூப் 2 தேர்வு எழுத வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று தேர்வாணையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2 ஏ தேர்வு எழுதுவோர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும், முகக்கவசம் அணிந்து வருவோர் மட்டுமே தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். இதேபோல், தேர்வு எழுத வருவோர் ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை அணிந்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்ட...
Posts
Showing posts from May 12, 2022