Posts

Showing posts from May 10, 2022
Image
  பிளஸ்-1 பொதுத்தேர்வு: முதல் நாளில் 43,533 பேர் ஆப்சென்ட்..! தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (10ம் தேதி) தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 3,119 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் முதல் நாளில் 43,533 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 
Image
  விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல் தமிழகத்தில்விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இத்துடன் மேலும் மூன்று அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு பதிலளித்த துறையின் அமைச்சரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், "விரைவில் 3 ஆயிரம் புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் முக்கிய அறிவிப்புகள் அடங்கிய புத்தகம் அச்சிடப்பட்ட பின்னர், என்னுடைய அலுவலகத்தில் என்னைச் சந்தித்த சில காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதனை மனதில் கொண்டு, அறிவிப்பு புத்தகத்தில் இல்லாவிட்டாலும்கூட, 3 புதிய அறிவிப்புகளை தற்போது நான் வெளியிடுகிறேன். > இரவுப் பணிக்குச் செல்லும் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, இரவு ரோந்துக்குச் செல்லும் அனைத்து காவல் ஆளிநர்க...