Posts

Showing posts from May 9, 2022
Image
  பழைய பென்ஷன் திட்டம் வலியுறுத்தி லட்சம் பேர் கோட்டை நோக்கி பேரணி அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. இதில் , தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது : தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்துவது சாத்தியமில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.  இது அரசு ஊழியர்களுக்கு கோபம் , வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நிதி அமைச்சரின் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும் , திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் வரும் மே 9ம் தேதி , தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழக அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் ஜூன் 3 வது வாரத்தில் தமிழகத் தின் 7 முனைகளிலிருந்து வாகன பிரசாரம் செய்யப்படும். தொடர்ந்து , ஜூலை 2 ம் தேதி கோரிக்கை முழக்க கருத்தரங்கங்கள் மாவட்ட தலை நகரங்களில் நடத்தப்ப டும். ஜூலை 3 வது வாரத்தில் மாவட்ட தலைநகரங்களில் தர்ண நடத்தப்பட...
Image
  அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை.. ஜூன் 15 முதல் விண்ணப்பம்.. வெளியான அறிவிப்பு.!!!! அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி முறையில் எம்பிஏ மற்றும் எம் சி ஏ படிக்கும் மாணவர்களுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பை வெளியிடப் பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தின் சார்பாக எம்பிஏ மற்றும் எம்சிஏ ஆகிய முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளுக்கான சேர்க்கை தொலைதூர கல்வி நுழைவுத் தேர்வு அல்லது டான்செட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும். இந்நிலையில் இந்தப் படிப்புகளுக்கு நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கான விண்ணப்பம் ஜூன் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.மற்ற படிப்புகளுக்கு விண்ணப்பம் வழங்கும் தேதி admissions.annauniv.edu என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் வலைத்தள பக்கத்தில் வெளியாகியுள்ளது.
Image
  TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு.! தமிழக அரசு வெளியிட்ட செம தகவல். போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் புதிய உத்திகளுடன் செயல்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆணையத்தின் மீதான விவாதங்களும் அரசின் புதிய புதிய அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத்துறை கொள்கை குறித்த விவாதம் நடைபெற்றது; அரசு தனது விளக்க குறிப்பில் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு மையம் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாட்டின் இளைஞர்கள் அதிகளவில் வெற்றி பெற உதவியுள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியம், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்புத்துறை பணிகளுக்கு மற்றும் பொதுத்துறை நிறுவன பணிகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்களைத் தயார்ப்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு புதிய திட்டம் ஏற்படுத்தப்படும...