Posts

Showing posts from May 8, 2022
Image
  பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..!  பழைய ஓய்வூதியத் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருவாரூரில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கல்வியின் தேவையை உணர்ந்து, கிராமப்புறங்களில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அதனை செயல்படுத்த இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக ஆட்சிக்கு வந்தபோது ரூ.5.75 லட்சம் கோடி நிதி பற்றாக்குறையில் இருந்தது. அதை சரி செய்யக்கூடிய...
 "பகுதி நேர ஆசிரியர்கள் பணி" - தமிழக அரசுக்கு ஜி.கே. வாசன் வைக்கும் முக்கிய கோரிக்கை!!  தமிழக அரசு பகுதி நேர ஆசிரியர்கள் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசால் கடந்த 2012 -ம் ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர் . தற்பொழுது இவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ .10 ஆயிரம் அளிக்கப்படுகிறது . இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இந்த ஊதியமானது போதுமானதாக இல்லை . பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய பல்வேறு காலக்கட்டங்களில் ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் மூலம் வலியுறுத்தி வருகின்றனர் . இந்நிலையில் தற்பொழுது சென்னை டி.பி.ஐ வளாகத்தில் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக தங்களது தேர்தல் அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது . ...