
TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப்பணி 16: புவியியலில் முழு மதிப்பெண்கள்: எளிதாகப் பெறுவது எப்படி? அரசு அதிகாரிகள் உட்பட எந்தவொரு நபருக்கும் புவியியல் குறித்த அடிப்படை அறிவு தேவை புவி அமைவிடங்கள், இயற்கை உருவாக்கங்கள், அவை உருவான விதம், வாழ்வியலில் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை அறிந்துகொள்வதன் மூலமே, ஒருவர் நிர்வாகப் பணியில் சிறப்பாக ஈடுபட முடியும். குரூப் 4 தேர்வுக்குத் தயாராக புவியியல் பாடத்தில் புவி அமைவிடத்தை எப்படிப் படிக்க வேண்டும்? என்பது பற்றிக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். மீதமுள்ள பாடத்திட்டங்களை எப்படிப் படிப்பது என்று ஆட்சிக் கல்வி ஐஏஎஸ் அமைப்பைச் சேர்ந்த செல்வ ராம ரத்னம் கூறியதாவது: ''2. போக்குவரத்து - தகவல் தொடர்பு. 3. தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல். 4. பேரிடர் - பேரிடர் மேலாண்மை - சுற்றுச்சூழல் - பருவநிலை மாற்றம். போக்குவரத்து - தகவல் தொடர்பு போக்குவரத்து பகுதியைப் பல பிரிவுகளாகப் பிரித்துப் படிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே, விமான நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், துறைமுகங்கள், நீர்வழிப் போக்குவரத...