
ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு, பூந்தமலையில் உள்ள ஆர்.சி.எம் சிறுபான்மை பள்ளியில் பள்ளி உதவியாசிரியராக (B.T Assistant - Maths) மனுதாரர் பணியமர்த்தப்பட்டார். நியமனம் செய்யப்பட்ட ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக தமிழக அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையும் அவருக்கு அளிக்கப்பட்டுளளது. இதற்கிடையே, இப்பள்ளி கடந்த 2016ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. பள்ளி நிர்வாகம், மனிதாரரை மீண்டும் உதவியாசிரியராக நியமித்தது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார். உதவி தொடக்கக் கல்வி அலுவலரின் அனுமதியுடன் 2013 முதல் 2016 வரை ஊதிய உயர்வும் மனுதாரர் வாங்கியுள்ளார். மேலும், 2016ம் ஆண்டு தனது இரண்டாவது குழந்தை பிறக...