
2ஆண்டுக்கு பின்னர் பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்கள் அச்சமின்றி பொதுத் தேர்வு எழுதுவது எப்படி?: தலைமை ஆசிரியர் தரும் பயனுள்ள தகவல்கள் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்து பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுவதால் நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்பட உள்ளது.பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே 5ம்தேதி தொடங்குகிறது. 2 ஆண்டுகளுக்கு பின் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் மாணவர்கள் அச்சமின்றி தேர்வை சந்திப்பது குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நெல்லை மாவட்டம் கடம்பன்குளம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுந்தரம் தெரிவித்த ஆலோசனைகள் வருமாறு:தேர்வுக்கு தயாராவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தமிழக அரசின் கல்வித்துறை அறிவித்துள்ள பாடப்பகுதியை நன்கு அறிந்து கொள்ளுங்கள். ஏற்கனவே படித்த பாடங்களையே மீண்டும் மீண்டும் படியுங்கள். இது மிக முக்கியம். தேர்வு நேரத்தில் புதிதாக படிப்பது என்பது மிகவும் கடினம் என்பதால் படித்த பாடங்களை...