Posts

Showing posts from May 2, 2022
  பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் பள்ளிகளுக்கு விரைவில் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஒடிசா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு வெப்பம் காரணமாக காலை 6 மணிமுதல் 9 மணிவரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் அன்பில் மகேஷ் பேசுகையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். கரோனா காலத்தில் பள்ளிகள் இயங்காததால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதால், அவர்களிடையே மோதல்கள் ஏற்படுகிறது. மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும் என்றார்.
Image
  டிஎன்பிஎஸ்சி (2022) குரூப் 4 தேர்வர்களே!.. மே 11 வரை அவகாசம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!!! தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,382 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு வருகின்ற ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை அளிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. அதன்படி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 28ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் குரூப்-4 தேர்வுக்கு 21,83,225 பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த குரூப்-4 தேர்வில் கலந்து கொள்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டித்தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி தமிழக அரசு சார்பில் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி மற்றும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள...
Image
  தமிழகத்தில் கொளுத்தும் வெயில்.. 1-9 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ்?.. விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு...!!!!! தமிழ்நாட்டில் சென்ற இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதனால் மாணவர்கள் நேரடி வகுப்புகளை இழந்துவந்தனர். இந்த நிலையில் சென்ற வருடம் இறுதியில் கொரோனா வைரஸ் குறைந்ததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் இயங்க தொடங்கியது. இதையடுத்து நேரடி முறையில் தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த வருடம் கட்டாயம் நேரடி முறையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து அதற்கான தேதியையும் அறிவித்தது. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இதில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளானது சென்ற ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கியது. அதன்பின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5- 28ஆம் தேதி வரை நடைபெறும். அதனை தொடர்ந்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6- 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 9-31ம் தேதி வரையும் நடைபெற இருகிறது.  அடுத்ததாக வரும...
Image
  10, பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு வகுப்புகள் இன்று நிறைவு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு செய்முறை தேர்வுகள் முடிந்து, இன்றுடன் வகுப்புகள் நிறைவு பெறுகின்றன. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும் 5ம் தேதி முதல் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. பிளஸ் 2வுக்கு மே 5; 10ம் வகுப்புக்கு மே 6; பிளஸ் 1க்கு மே 10ல் பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. இந்த மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வுகள், ஏப்ரல் 25ல் துவங்கின; செய்முறை தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன. இதையடுத்து, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, வகுப்புகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன.அரசு பள்ளிகளை பொறுத்தவரை, மாணவர்கள் தேர்வுக்கு வரும் போது, 'ஹால் டிக்கெட்'டை மறந்து விட்டு வந்து, பதற்றமாவதை தவிர்க்க, அவர்களின் ஹால் டிக்கெட்டுகளை தேர்வு மையத்தில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் சிலவற்றில், மாணவர்களிடம் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், மாணவர்களுக்கு பொதுத்...