Posts

Showing posts from April 26, 2022
Image
  TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு இன்று கடைசி நாள்   ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், இன்றுடன் முடிகிறது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணியாற்ற, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.  ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த, மாநிலங்களுக்கு, மத்திய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்திஉள்ளது.நடப்பு கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு, மார்ச் 7ல் அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு மார்ச் 14ல் துவங்கியது; ஏப்., 13ல் முடிந்தது. இணையதள, 'சர்வர்' பிரச்னையால், விண்ணப்பிக்க முடியவில்லை என பலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அவகாசம் அளிக்கப்பட்டு, இம்மாதம் 18ம் தேதி மீண்டும் விண்ணப்ப பதிவு துவங்கியது; இன்றுடன் அவகாசம் முடிகிறது. மொத்தமாக ஐந்து லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என தெரிகிறது.
Image
  TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு: வரும் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.! இல்லை என்றால் விண்ணப்பிப்பதில் சிக்கல்.! தேர்வாணையம் தகவல் TNPSC தேர்வர்கள் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்குடன் ஆதார் எண்ணை வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.. ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration) கணக்கு வைத்திருக்கும்‌ அனைத்து விண்ணப்பதாரர்கள், அவர்களது ஆதார்‌ எண்ணை தவறாமல்‌ இணைக்க வேண்டும்‌ என்றும்‌, அதனடிப்படையில்‌, எதிர்காலத்தில்‌ தேர்வாணையத்தால்‌ வெளியிடப்படும்‌ அறிவிக்கைகளுக்கு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள்‌ தங்களது இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும்‌, தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம் சமிபத்தில் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து, தற்போதுவரை ஒருமுறை நிரந்தரப்‌ பதிவுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்காத மற்றும்‌ ஒருங்கிணைந்த Group-4 தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ பெருவாரியான தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின்‌ அடிப்படையில்‌, தேர்வர்களின்‌ நலன்கருதி, ஒருமுறை நிரந்தரப்பதிவுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 30.04.2022 வரை தேர்வாணையத்தால்‌ நீட்டிக்கப்பட்டது.  மேலும்‌, ஒரும...