10, 11, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (ஏப்.25) தொடங்கி மே 2 வரை நடக்கிறது. மாநிலம் முழுவதும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர். இதையடுத்து தேர்வுத் துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. வழக்கமாக 3 மணி நேரம் நடத்தப்படும் செய்முறைத் தேர்வு, பள்ளிகளின் பரிந்துரையின்படி நடப்பாண்டு முதல் 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
Posts
Showing posts from April 25, 2022
- Get link
- X
- Other Apps
வரும் 28ம் தேதியுடன் காலக்கெடு முடிகிறது குரூப் 4 தேர்வுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பம்: டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தகவல் குரூப் 4 தேர்வுக்கு நேற்று மாலை வரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 இடம், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2,108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024 என 7,138 இடங்கள். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் குரூப் 4 பதவியில் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களும் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வுக்கு கடந்த 30ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட